புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு வந்த உத்தரப்பிரதேச வாலிபர் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு!
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். உத்தரபிரதேசம் மாநிலம் ஆவாஜ் பிகார் காலனியை சேர்ந்தவர் துளசிதாஸ். அவரது மகன் மகேஷா. பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்தார். அதன்படி நண்பர்கள் 7 பேருடன் புதுவைக்கு வந்தனர். இவர்கள் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கோட்டக் குப்பம் அருகே சின்ன முதலி யார் சாவடியில் விடுதி எடுத்து தங்கினர். பின்னர் மகேஷா தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள கடலில் குளித்தார்.
அப்போது எழும்பி வந்த ராட்சத அலை மகேஷாவை இழுத்து சென்றது. அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோட்டக் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று அவர் இறந்த நிலையில் உடல் கரை ஒதுங்கியது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்காக புதுவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்