புதுச்சேரி: மாணவன் கொலை: படிப்பில் போட்டியாக இருந்ததால் சக மாணவியின் தாய் செய்த கொடூரம்
புதுச்சேரி: குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்து மாணவன் கொலை.. படிப்பில் போட்டியாக இருந்ததால் சக மாணவியின் தாயார் வெறிச்செயல்..
புதுச்சேரி: குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்து மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் குடியிருப்பு கட்டிடடத்தில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன்- மாலதி. இவர்களுடைய மகன் பால மணிகண்டன்(13) காரைக்கால் நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். நேற்று காலை 11:00 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் வந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரிடம், எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அவர் உடனடியாக வகுப்பறையில் இருந்த பால மணிகண்டனிடம் அதனை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளான். நேற்று பள்ளி ஆண்டு விழா என்பதால் மதியம் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பால மணிகண்டன் வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் வாந்தி எடுத்துள்ளான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்தனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதனை உறுதிப்படுத்தியதையடுத்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணையில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் தாயார் சகாயராணி விக்டோரியா(42) குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு முரணான தகவலை தெரிவித்ததார். குளிர்பானத்தை கொடுக்கவில்லை.. பிஸ்கட் மட்டுமே கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிசிடிவி காட்சியில் குளிர்பானம் அவர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் விசாரணை செய்ததில் பால மணிகண்டன் நன்றாக படிப்பதாகவும் தற்போது நடைபெற்ற தேர்வில் அவர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது. மேலும் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் அவன் சிறப்பாக திறமை காட்டியுள்ளார். அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் தாயார் விஷம் கொடுத்ததாக மாணவனின் தந்தை ராஜேந்திரன் புகார் அளித்தார். இந்த நிலையில் மாணவன் பால மணிகண்டன் நேற்று நள்ளிரவு அரசு மருத்துவமனையில் இறந்தார். இதனை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். இதனிடையே சகாயராணி விக்டோரியா(42) மீது காரைக்கால் நகர போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?https://t.co/wupaoCQKa2 | #Karaikal #Schools pic.twitter.com/h7YRFQMlAK
— ABP Nadu (@abpnadu) September 3, 2022
இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்