மேலும் அறிய
Advertisement
Madurai: ரியல் எஸ்டேட்டுக்காக கால்வாயை ஆக்கிரமித்து புதிய பாலம்? புகாரளித்தால் மிரட்டல்! மதுரை சர்ச்சை!
பிளாட்டுகளை விற்பனை செய்ய கிருதுமால் நதியின் கிளைக் கால்வாயில் சட்ட விரோதமாக பாலம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு தி.மு.க., கவுன்சிலர் உடந்தை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மதுரை மாநகராட்சி 68-வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி, காந்திஜி தெரு விரிவாக்க பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கிருதுமால் நதியின் கிளைக் கால்வாயை ஆக்கிரமித்து பால்சாமி மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் பாலம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த பாலம் கட்டினால் தான், தங்களது ரியல் எஸ்டேட் இடங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என சுயநலமாக யோசித்து தேவையற்ற இடத்தில் நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் நபர்கள் பாலம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் 68-வது வார்டுக்கு உட்பட்ட தி.மு.க., கவுன்சிலர் மூவேந்திரன் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக நடக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளதால். பாலத்தை இடிக்காமல் அதிகாரிகள் கண்துடைப்பிற்கு போர்டு ஒன்றை மட்டும் வைத்து சட்ட விரோத செயலுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு வாசிக்கப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவரிடம் இது குறித்து பேசினோம்..," சம்மந்தப்பட்ட ரியல் எஸ்டேட் இடத்திற்கு பாதை இல்லை என கிருதுமால் நதிக் கிளைக் கால்வாயை ஆக்கிரமித்து பாலம் போட்டுள்ளனர். இதனால் பிற்காலத்தில் பாலம் எடுக்க வேண்டும் என சூழல் ஏற்பட்டால் இடம் வாங்கிய நபர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதே போல் நீர் நிலையின் அமைப்பும் மாறுபடும் என புகார் அளித்தேன். ஆனால் உதவி செயர்பொறியாளர் பாலமுருகன் மற்றும் அவரின் உதவியாளர் அபுதாஹீர் ஆகியோர் புகார் கொடுத்த என்னையே மிரட்டினார்கள்.
68-வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அவர்களின் பின்புலத்தில் இருப்பதால் இவ்வாறு மிரட்டலில் ஈடுபடுகின்றனர். தற்போது உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதால் கண்துடைப்பிற்கு ஒரு போர்டை வைத்துள்ளனர். இது முழு நடவடிக்கையாகாது. பாலத்தை பலரும் தற்போதும் பயன்படுத்துகின்றனர். எனவே கால்வாயின் ஆக்கிரமிப்பான பாலத்தை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். சட்ட விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது குறித்து மதுரை மாநகராட்சி 68-வது வார்டு கவுன்சிலர் மூவேந்திரனிடம் பேசினோம்..," இடத்திற்கு சொந்தமான பாலு என்பவர் கவுன்சிலர் என்ற முறையில் என்னிடம் முறையிட்டார். புரோக்கர் கமிஷன் கொடுக்கவில்லை என ரமணி என்பவர் மிரட்டுகிறார் என தெரிவித்தார். இதனால் உதவி செயற்பொறியாளர் ஆலோசனைப்படி பாலத்தை ஆக்கிரமித்தாக இரண்டு நபர்களுக்கு தலா 10 ஆயிரம் பைன் போட்ட பின் மாநகராட்சியின் கீழ் பாலத்தை எடுத்துக் கொண்டுள்ளது. என்னுடை வார்டு என்பதால் தான் அதைக்கூட செய்தேன். எனக்கும் அந்த பாலத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பாலத்தை இடித்தால் கூட எனக்கு பிரச்னை இல்லை” என்றார்.
இது குறித்து தெரிந்து கொள்ள மதுரை மாநகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டோம்...' நான் அலுவலக மீட்டிங்கில் உள்ளேன். எதுவாக இருந்தாலும் அலுவலகத்துற்கு பேசி தகவல் பெற்றுக் கொள்ளவும் என்றார்.
மேலே இது குறித்து கேட்க மதுரை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர் மனோகரனை தொடர்பு கொண்டு பேசினோம்..," அனுமதி பெறாமல் பாலம் கட்டியது உண்மை தான். அது குறித்து மாநகராட்சி கமிஷனர் வரை புகார் வந்தது. அதனால் 10ஆயிரம் பெனால்டி போட்டி தற்காலிகமாக யாரும் அந்த பாலத்தை பயன்படுத்த கூடாது என உத்தரவு போடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
அரசு இடத்தில் சட்ட விரோதமாக பாலமே கட்டியுள்ளனர். இது போன்ற சட்ட விரோத செயல்களில் கடுமையான நடவடிக்கை இல்லை என்றால், தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கை: போலி ஆவணங்கள்.! புரோக்கர்களாக மாறிய வட்டாட்சியர், வி.ஏ.ஓ! கைமாறிய 200 ஏக்கர்!?
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion