மேலும் அறிய

அஞ்சல் ஊழியர் மரணம் : அமெரிக்க வாழ் கணவர் கூலிப்படை வைத்துக் கொன்றாரா? நடந்தது என்ன?

பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்துவைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனில்லாததால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் புகார் அளித்தும் பலன் இல்லாததால் 50 நாட்களுக்கு முன் ஜெயபாரதி விவாகரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷ்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திருவாரூர் அடுத்த கிடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதிக்கும், கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். மணமக்கள் இருவரும் திருமண ஆன சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு சென்றுவிட்டனர். அங்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும், குழந்தையையும் திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கே விஷ்ணு பிரகாஷ் அனுப்பிவிட்டார் 

பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்துவைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனில்லாத்தால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் புகார் அளித்தும் பலன் இல்லாததால் 50 நாட்களுக்கு முன் ஜெயபாரதி விவாகரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்சனையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் ஃபோனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் ஜெயபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும்போது வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக ஜெயபாரதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக திருவாரூர் தாலுக்கா காவல்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு கார் விபத்தில் இறந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.

அஞ்சல் ஊழியர் மரணம் : அமெரிக்க வாழ் கணவர் கூலிப்படை வைத்துக் கொன்றாரா? நடந்தது என்ன?

இதனிடையே ஜெயபாரதியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது விபத்தில்லை எனவும் திட்டமிட்டு வாகனத்தை வைத்து ஜெயபாரதியை கொலை செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டி உரிய விசாரணை நடத்தவேண்டும் என பாரதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வாகனம் திருவாரூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், அதை இருதினங்களுக்கு முன்பு கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த ஒருவர் வாங்கி சென்றதாகவும் வாங்கியவர் விவரமோ, வாகனத்தில் வந்தவர்கள், ஓட்டுநர் பற்றியோ விவரம் தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் அன்று காலை ஜெயபாரதி வேலைக்கு செல்லும்பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின்தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டு ஜெயபாரதியை கொலை செய்துள்ளாக போலீசாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget