மேலும் அறிய

TTF Vaasan: காலையிலேயே அதிரடியாக கைது செய்த காஞ்சி போலீஸ்! சிறைக்கு செல்கிறார் TTF வாசன்!

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக பிரபல யூடியூபர் TTF வாசனை, காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக பிரபல யூடியூபர் TTF வாசனை, காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது ஏற்கனவே இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது, கவனக்குறைவாக செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விலிங் செய்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து TTF வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட TTF வாசன், பாலுசெட்டி காவல் நிலையத்திற்கு விசாரணக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அவரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து  பிரபலமானவர்.  அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம்,  டி.டி. எஃப். வாசனை யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.  இதனிடையே, செல்அம் என்ற இயக்குனர் இயக்கி வரும் மஞ்சள்வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாலைகளில் அதிவேகமாக செல்லும் டிடிஎqப் வாசனை பல முறை பலரும் கண்டித்தும், விமர்சித்தும் வந்த நிலையில் அவர் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் சாகச பயணம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் அவர் விபத்தில் சிக்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எஃப். வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

லைசன்ஸ் ரத்தா?

டி.டி.எஃப் வாசனின்  இந்த சாகச பயணங்களும், அதிவேகமாக வாகனம் செலுத்துவதும் பொதுமக்களுக்கு இடையூறாக மட்டுமின்றி, உயிருக்கு ஆபத்தானதாகவும் உள்ளது. எனவே, அவரது வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக வலதளங்களில் பலரும் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டும் உரிமத்தை ரத்து செய்ய  தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், விரைவில் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget