மேலும் அறிய

Pakistan: ‘செத்தும் நிம்மதி இல்லை’ - இறந்த பெண்களின் உடலை தோண்டி பாலியல் வன்கொடுமையா? மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பூட்டுப் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பூட்டுப் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக பெண்கள் மீதான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய,மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. உலகளவில் பெண்களுக்கான குற்றங்களுக்கு அந்தந்த அரசுகள் கடுமையான தண்டனைகளை கொடுத்து வருகிறது. இப்படியான நிலையில் பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டுப் போடும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு காரணம், பாகிஸ்தானில் நெக்ரோஃபிலியா என்ற நோயின் பயம் அதிகரித்துள்ளதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்களுடன் உடலுறவு கொள்வதாகவும் கூறப்படுவதே ஆகும். 

நெக்ரோஃபிலியா 

நெக்ரோஃபிலியா என அழைக்கப்படும் இத்தகைய கொடூர மனநிலை, இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்வதன் மூலம் இன்பம் பெறுவதை குறிக்கிறது. மிகவும் தீவிரமான மனநோய் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் றந்த உடலுடன் உடலுறவு கொள்ள நினைப்பவர்கள், அப்படியான சடலங்கள் கிடைக்கவில்லை என்றால், ஒருவரைக் கொன்று அந்த உடலுடன் உடலுறவு கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. இந்த நோய் பெண்களை விட ஆண்களில் அதிகம் காணப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. 

நெக்ரோஃபிலியா என்ற வார்த்தையில் நெக்ரோ என்பது இறந்த உடல் என்றும்,  ஃபிலியா  என்றால் காதல் என்று பொருள் கூறப்படுகிறது. இத்தகைய நோயால் பாதிக்கப்படுபவர்கள், இறந்த சிறுமிகளின் உடலை கல்லறையிலிருந்து வெளியே எடுத்து பாலியல் உறவு கொள்வார்கள். பாகிஸ்தானில் இதுதொடர்பான சம்பவங்கள் முன்னதாக நடைபெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், கல்லறைகளுக்கு பூட்டுப் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வழக்குகள் 

நெக்ரோஃபிலியா வழக்கு முதல்முறையாக 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கண்டறியப்பட்டது. அங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 50 பெண்களைக் கொன்று அவர்களின் உடல்களுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தைச் சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் என்ற கல்லறை பாதுகாவலர் 48 பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள “The Curse of God, why I left Islam” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஹாரிஸ் சுல்தான், இத்தகைய மோசமான செயல்களுக்கு கடுமையான இஸ்லாமிய சிந்தனைகளே காரணம் என  குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பாலியல் விரக்தியுள்ள சமூகத்தை உருவாக்கியுள்ளது. நீங்கள் பாலியல் குற்றங்களுக்கு புர்காவை காரணம் சொல்லும்போது, அதன் விளைவு கல்லறை வரை பின்தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget