மேலும் அறிய

ஆன்லைன் மோசடி: வீட்டில் இருந்தே வேலை என ஆசை காட்டி ₹20 கோடி வரை ஏமாற்றம்! எச்சரிக்கை!

புதுச்சேரி: வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் வேலை எனக்கூறி 300க்கும் மேற்பட்ட பொது மக்களை ஏமாற்றி 20 கோடிக்கு மேல் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை எனக்கூறி 300க்கும் மேற்பட்ட பொது மக்களை ஏமாற்றி ரூ.20 கோடிக்கு மேல் மோசடி செய்த இணைய வழி குற்றவாளிகள்.

இணைய வழி குற்றங்கள் அதிகரிப்பு 

இந்தியாவில் இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி பல வகைகளாக குற்றங்களாக உருபெற்று வருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆர்வம் காட்டும் பெண்கள், இல்லத்தரசிகள், வேலை இல்ல பட்டதாரிகள் போன்றோரை வயது வரம்பு இல்லாமல் இணைய மோசடிக்காரர்கள் ஏமாற்றிவருகின்றனர்.

வீட்டில் இருந்தே வேலை செய்து சம்பாரிக்கலாம்

குற்றவாளிகள் முதலில் சமூக வலைதளமான வாட்ஸாப், முகநூல் மற்றும் டெலிக்ராம் போன்றவற்றில் இருந்து முன் பின் தெரியாத எண்களில் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ் ஸ்ரீலங்கா சீனா கம்போடியா நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு பல MNC (Multi National Company) நிறுவனங்களின் பெயர்களில் வீட்டில் இருந்தே வேலை செய்து சம்பாரிக்கலாம் என்று மக்களை தூண்டி விடுவது போல் மெசேஜ் அனுப்புகின்றனர்.

பிறகு சிறு சிறு வேளைகளான வீடியோக்களுக்கு லைக் கொடுப்பது Review செய்வது ஆன்லைன் Share செய்வது, Typewriting Work போன்றவற்றை செய்ய வைத்து ஒரு வீடியோக்கு ருபாய் 50ல் இருந்து 150 வரை லாபம் ஈட்ட வைத்து ஒரு நாளைக்கு 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை வருமானத்தை அவர்களுடைய வங்கி கணக்கிற்கே அனுப்பி ஆசையை தூண்டுகின்றனர். வீட்டிலுருந்தே துரிதமாக சம்பாதித்த ஆசையில் பொது மக்கள் மேலும் மேலும் பணத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் அதிகமான வீடியோக்களுக்கு லைக் மற்றும் Review செய்கின்றனர்.

ப்ரீபெய்ட் டாஸ்க்

ஒரு கட்டத்தில் இணைய குற்றவாளிகள் இவர்களிடம் நீங்கள் அதிகம் வருமானம் ஈட்டி அதிக ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதால் ப்ரீபெய்ட் டாஸ்க் எனும் புதிய ஏமாற்று வழியை அறிமுகம் செய்து அதில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் இல்லையெனில் வேலையாய் தொடர முடியாது என பீதி ஏற்படுத்துகின்றனர். இவர்கள் நோக்கத்தை புரிந்து கொண்ட ஒரு சிலர் விலகிக்கொள்கின்றனர், மீதி உள்ளவர்கள் புரிந்தும் புரியாமலும் அவர்கள் கூறுவதை செய்ய ஆரம்பிக்கின்றனர் அப்படி வருபவர்களுக்கு மோசடிக்காரர்கள் போலியான வலைத்தளங்களை உருவாக்கி அதில் பொது மக்களை கணக்கு தொடங்க வைத்து அவர்கள் கூறும் தொகையை முதலீடு செய்ய வைக்கிறார்கள்.

இவர்களும் முன்பு லாபம் ஈட்டிய மலைப்பில் அவர்கள் வேலை செய்து சம்பாதிக்க வந்ததை மறந்து பணத்தை முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள் சிறிது நேரம் கழித்து அவர்கள் கணக்கில் பெரும் தொகை லாபம் கிடைத்துள்ளது போல் இணைய வழி குற்றவாளிகள் ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். அதனுடைய ஆபத்தை அறியாத அப்பாவி பொது மக்கள் அந்த பிம்பத்தை அப்படியே நம்பி மேலும் பணத்தை முதலீடு செய்கின்றனர். அவர்களிடம் பணம் இல்லையென்றாலும் பிறரிடம் கடன் பெற்று முதலீடு செய்கின்றார்கள்.

ஒரு கட்டத்தில் பெரும் தொகை லாபம் கிடைக்க பெற்றதை பார்த்த பின் அதை வெளியே எடுக்க முற்படும் போது இணைய வழி குற்றவாளிகள் அவர்கள் கணக்கை முடக்கி நீங்கள் அதிக தொகை ஈட்டியுள்ளதால் அதற்கு அரசாங்க வரி, சேவை வரி, செயல் முறை கட்டணம் என்ற பெயரில் பணம் கட்ட சொல்கின்றனர். லாப தொகை அதிகம் என்பதாலும் அதை எப்படியாவது பெற்றே ஆகவேண்டும் எனும் நோக்கில் மோசடிக்காரர்கள் கூறும் தொகையை அவர்கள் கூறும் பல்வேறு வங்கி கணக்கிற்கு அது யாருடைய வங்கி கணக்கு அது அந்த நிறுவனத்தோடு தொடர்புடையதா இல்லையா மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு அதன் பெயரில் வங்கி கணக்கு இல்லாமல் வெவ்வேறு இந்தியர்களின் வங்கி கணக்கில் பணம் பெற வேண்டிய அவசியம் என்ன என்பதை சற்றும் சிந்தித்து பார்க்காமல் கேட்கும் தொகையை கடன் பெற்றாவது அனுப்புகின்றனர்.

கேட்கும் தொகையை கட்டிய பிறகு லாப பணத்தை தராமல் மேலும் தொகை கட்ட வேண்டும் என சொல்லும்போது தான் மக்களுக்கு சந்தேகம் எழுந்து எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறனர் அப்படி கேள்வி கேட்டதும் மோசடிக்காரர்கள் தொடர்பை துண்டித்து கொண்டு மாயமாகிவிடுகின்றனர் இதன் பிறகு தான் பொது மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே உணருகின்றனர். இவ்வாறாக பொது மக்கள் தங்கள் இழந்த பணத்தை மீட்டு தர கோரி புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட புகார்கள் 20 கோடி இழப்புக்கு பதிவாகி உள்ளது.

இதில் அதிகம் ஏமாந்து வந்த புகார்கள் படித்த பெண்கள் மற்றும் பொது மக்கள். ஆகையால் பொதுமக்கள் சமூக வலைத்தளம் மற்றும் இணையதளம் மூலம் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு வீட்டில் இருந்தே வேலை செய்து சம்பாரிக்கலாம் என்று வரும் விளம்பரத்தை நம்பி உழைத்து சம்பாரித்த பணத்தை டெலெக்ராம் வாட்ஸாப்ப் முகநூலில் வரும் போலியான பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி போலீசார் அறிவுறுத்துகின்றனர். 

மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்கwww.cybercrime.gov.in

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget