மேலும் அறிய

கன்னியாகுமரி: கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த கும்பல்; கால்தடம் வைத்து போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் ராகவேந்திரா கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் ராகவேந்திரா கோவிலில் உண்டியல் பணம் ரூ.75 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடித்த பொருட்களுடன் கயிறு கட்டி வயல் வழியாக சென்ற கொள்ளையர்களின் கால் தடம் நகல் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் மாவட்டம் முழுவதும் அவர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கன்னியாகுமரி: கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த கும்பல்; கால்தடம் வைத்து போலீஸ் விசாரணை
 
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடந்து வருகிறது. இந்த கோவிலில் வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வார்கள். நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலையில் கோவில் மேற்பார்வையாளர் அனந்தகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த இரண்டு உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் இருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று இருந்தனர். மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
கன்னியாகுமரி: கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த கும்பல்; கால்தடம் வைத்து போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்கள் கோவில் பின்புறம் கம்பியில் கயிறு கட்டி அருகிலுள்ள வயல்வெளி வழியாக தப்பித்துள்ளனர். அவர்களது கால்தடங்கள் பதிந்துள்ள நிலையில் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வயல்வெளியில் பதிந்துள்ள கால்தடங்களை வெள்ளை சிமெண்ட் கலவை கொண்டு நகல் எடுக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ராகவேந்திரா கோவிலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget