மேலும் அறிய

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு முயற்சி: ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது!

போலி ஆவணம் தயாரித்து , அதன் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து , அதன் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ளது ஊஞ்சம்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு சங்கராபுரத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வாங்குவதற்காக கடந்த 2020ம் ஆண்டு பெரியகுலத்தைச் சேர்ந்த சந்தனபாண்டியன் முன்வந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டதன் அடிப்படையில் நிலத்தை வாங்க சந்திரசேகரனிடம், சந்தனபாண்டியன் ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார்.

ஆனால், ஒப்பந்தம் படி, சந்திரசேகரன் உரிய காலத்தில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. பத்திரப்பதிவை இழுத்தடித்து வந்ததால், சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணம் ரூ. லட்சத்தைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

பணம் பெற்றுக் கொண்டதோடு சந்தனப்பாண்டியன் நிற்கவில்லை. அந்த நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய மணவாளனுடன் இது குறித்துப் பேசியுள்ளார். மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் சந்திரசேகரனின் நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.

அதன்படி சந்திரசேகரன் சந்தனப்பாண்டியனிடம் நிலம் விற்றதாகவும் அதற்காக சந்திரசேகரன் தன்னிடம் இருந்து ரூ.1.5 (ஒன்றரை கோடி) வாங்கியதாகவும் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதனையறிந்த சந்திரசேகரன் அதிர்ந்து போனார். இந்த ஆவணம் போலி என்றும் தனது நிலத்தை மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக கடந்த ஆண்டு தேனி மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவில் சந்திரசேகரன் புகார் அளித்தார்.

இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியராக வரும் மணவாளனை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். 

நில அபகரிப்புப் புகாரில் மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் நில அபகரிப்பு நடைபெறுகிறது. தனி நபர்கள் மற்றவர்களின் நிலங்களை அபகரித்து தங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்து வருகின்றனர். ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் மாநிலங்களில் நில அபகரிப்பை தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே பிற மாநிலங்களை போல நில அபகரிப்பு தடுப்பு சட்டம் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நிலம் அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து நிலத்தை காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையுடன் எண்ணற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தலைப்பு செய்திகள்

ஒரு பேனர்... ஒரு நொடியில் விபரீதம்! விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
ஒரு பேனர்... ஒரு நொடியில் விபரீதம்! விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது
12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது
மதுரை, சிவகங்கை, ஒத்தக்கடை, மேலூர்... என அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் அச்சத்தில் பொதுமக்கள் !
மதுரை, சிவகங்கை, ஒத்தக்கடை, மேலூர்... என அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் அச்சத்தில் பொதுமக்கள் !
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
Fishermen Alert Weather Update: கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
Chennai Metro: கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
Embed widget