மேலும் அறிய

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... மைனர் சிறுவர்கள் நிகழ்த்திய கொடூரம்

சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தாலும், அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் வரை சிறுமி தனது பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை.

12 வயது மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பொறியியல் டிப்ளமோ மாணவர் உட்பட மூன்று மைனர் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறிக்கத் தவறிய சிறுவர்கள் கொடூரமான செயலின் வீடியோவை சமூக ஊடக தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாவட்டத்தின் ஜெனாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதே கிராமத்தில் வசிக்கின்றனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தாலும், அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் வரை சிறுமி தனது பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் வீடியோவை பார்த்து, இதுபற்றி அவரது தந்தைக்கு தெரிவித்தார். தந்தை மகளிடம் விசாரித்தபோது, ​​தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரித்தார்.


"பாதிக்கப்பட்டவரின் தந்தையின் புகாரைத் தொடர்ந்து, மூன்று சிறுவர்கள் மீது ஐபிசி, போக்சோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.


12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... மைனர் சிறுவர்கள் நிகழ்த்திய கொடூரம்

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 14-17 வயதுக்குட்பட்டவர்கள். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடியோ கிளிப்பைப் பயன்படுத்தி மைனர் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். 20,000 ரூபாய் கொடுக்கவில்லை என்றால், அதை பகிரங்கப்படுத்துவேன் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மறுத்ததால், அவர்கள் வீடியோவை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டனர். அது வைரலானது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறார் நீதி  வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்

முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10 கிலோ போதை பொருளை (Brown sugar) பறிமுதல் செய்த போலீசார், பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 6 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் சஹாதேவ்குண்டா காவல் நிலையத்திற்குட்பட்ட ஃபுலாடி அருகே ஒரு இடத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கிழக்கு ரேஞ்ச் ஐஜிபி ஹிமான்சு குமார் லால் மற்றும் எஸ்பி பாலசோர் சுதான்சு சேகர் சதாங்கி ஆகியோர் தெரிவித்தனர். போதை பொருள் கடத்தல் சம்பவம் குறித்து விரிவாக பேசியுள்ள எஸ்பி சுதான்சு சேகர் சதாங்கி, "11 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக 6 பேர், உள்ளூரை சேர்ந்த 5 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget