மேலும் அறிய

Crime: மனைவி தலையில் சிறுநீர் கழித்த கொடூரம்.. கோடிகள் செலவழித்தும் கொலை மிரட்டல்... கணவன் மீது இளம்பெண் புகார்

"வரதட்சணை கொடுக்க மறுப்பதால் குடித்துவிட்டு எனது தலையில் சந்தீப் சிறுநீர் கழிக்கிறார்" என அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

6 கோடி செலவு செய்து திருமணம் நடத்தியும், வரதட்சணை கேட்டு குடித்து விட்டு மனைவி மீது சிறுநீர் கழித்து கணவன் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 கோடி செலவு செய்து திருமணம்

பெங்களூரு, பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவர் மீது அளித்துள்ள புகாரில் ”நான் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண். என் தந்தை ஹைதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். பெங்களூரு பசவனகுடியைச் சேர்ந்த சந்தீப் என்பவருடன் எனக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஆடம்பரமாக நடந்த எங்கள் திருமணத்துக்கு எனது தந்தை 6 கோடி ரூபாய் செலவு செய்தார். மேலும் எனது கணவர் சந்தீப்புக்கு திருமணத்தின்போது 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம், 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றையும் வரதட்சணையாகக் கொடுத்தனர்.

தலையில் சிறுநீர் கழித்து கொடுமை

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தீப்பும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுக்க மறுப்பதால் குடித்துவிட்டு எனது தலையில் சந்தீப் சிறுநீர் கழித்து வருகிறார்.

என்னை இப்படி கொடுமைப்படுத்தி வருவதுடன் கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்தப் புகாரின்பேரில் சந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது பசவனகுடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் குழந்தை வேண்டி கொடுமை

இதேபோல் முன்னதாக ஆண் குழந்தை வேண்டி கணவன் மனைவியை கொடுமைப்படுத்திய நிலையில், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்த  நிலையில், முன்னதாக வீடியோ பதிவு செய்துவைத்துவிட்டு மந்தீப் கவுர் எனும் இப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.  

இந்நிலையில்,  சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது,பெண்ணின் கணவர் ரஞ்சோத்பீர் சிங், மந்தீப் கவுரை அடிப்பதும், அப்போது அவர்கள் குழந்தைகள் அழுதுகொண்டே தந்தையிடம் கெஞ்சுவதும், அப்போது அவர் குழந்தைகளில் கழுத்தை நெரித்து தனக்கு 'ஆண் பிள்ளை தான் வேண்டும்' என்று கூறுவதும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ரஞ்சோத்பீர் சிங்கை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget