Crime: தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவன் - நெல்லையில் சோகம்
காவல்துறையின் விசாரணையில் கணவன் மனைவி இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்து உள்ளது அத்திமேடு கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாய கூலித் தொழிலாளியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த சூழலில் முருகனும் பேச்சியம்மாளும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று பேச்சியம்மாளை சந்தித்து முருகன் தகராறில் ஈடுபட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முருகன் மனைவி பேச்சியம்மாளை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இரத்த வெள்ளத்தில் துடித்த பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சுத்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேச்சியம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையின் விசாரணையில் கணவன் மனைவி இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. மேலும் பேச்சியம்மாள் தனது மகள் வீட்டில் இருந்து விவசாயக் கூலித் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் முருகன் கடந்த சில நாட்களாக வேலைக்கு எதுவும் செல்லாமல் சுத்தமல்லி பகுதியில் உள்ள அவரது வீட்டில் மகனுடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் தனியாக இருந்த பேச்சியம்மாளிடம் முருகன் தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி அழைத்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதம் முற்றி உள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் இருந்த கத்தியால் முருகன் பேச்சியம்மாளை சரமாரியாக குத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை இன்று கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வரும் நிலையில் தப்பியோடிய முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவனே குத்தி கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்