மேலும் அறிய

கோர விபத்தில் சிக்கிய பைக் ரேஸ் வாலிபர்கள்; சம்பவ இடத்திலே இளைஞர் உயிரிழப்பு - நெல்லையில் நடந்தது என்ன?

நெல்லையில் பைக் ரேஸ் ஓட்டிய இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் 18 வயதே ஆன வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அம்பேக்தர் காலனியை சேர்ந்தவர் அரிச்செல்வம். இவரது மகன் மகாராஜன் (18), இவரது நண்பர்கள் முக்கூடலை சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (22), முத்தரசன்.  இவர்களில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய இருவரும் நேற்று முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரை தனித்தனியாக அதிவேக திறன் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரின்ஸ் சென்ற இருசக்கர வாகனத்தில் பின்னால் மகாராஜன் அமர்ந்துள்ளார். 

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு:

தொடர்ந்து மூவரும் சேரன்மகாதேவி விலக்கு வரை சென்றுவிட்டு மீண்டும் முக்கூடல் நோக்கி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முக்கூடல் அருகேயுள்ள பொட்டல்காலனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் பிரின்ஸ் வந்த வாகனம் மோதியுள்ளது. அதோடு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் பின்னால் வந்த பைக்கும் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர்களது பின்னால் வந்த ஒருவர் என அனைவரும் விபத்தில் சிக்கினர். அப்போது பிரின்ஸ் பின்னால் அமர்ந்து வந்த மகாராஜன் தூக்கி வீசப்பட்டதில் அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற  நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த முக்கூடல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு உயிரிழந்த மகாராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த களக்காடு பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (42) மற்றும் பொன்ராஜ் (42) மற்றும் அவர்களது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கிய முத்தரசன் மற்றும் விபத்தை ஏற்படுத்திய பிரின்ஸ் ஆகிய  நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பைக் ரேஸ்:

தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதோடு இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பைக் ரேஸில் தான் ஈடுபட்டனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதி வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடும் சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகும் சூழலில் நகர்ப்புறங்களை தாண்டி கிராமப்புற மாணவர்களும் இது போன்ற செயலில் ஈடுபடுவது என்பது கண்டிக்கத்தக்க செயலாகும். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உரிய விசாரணை நடத்தி இது போன்ற பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget