மேலும் அறிய

ஆபாச படத்தை திரையிட்ட ஆசிரியர்: வெளியேறிய மாணவிகள்: நாமக்கல்லில் அதிர்ச்சி!

வெளியில் சொன்னால் ஆசிரியர் அடித்துவிடுவார் இல்லையென்றால் பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்ற பயத்தில் யாரும் வெளியில் சொல்ல பயப்படுவதாக மாணவிகள் தெரிவித்தனர்.

ராசிபுரம் அடுத்த வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 20க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புரஜெக்டர் மூலம் ஆபாச படம் காட்டிய  உதவி தலைமை ஆசிரியரால் மாணவிகள் பள்ளிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து மகிழ்ச்சியுடன் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் 11ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு இயற்பியல் பாடம் நடத்த வந்த உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ கோமகன், கணிணி ஆய்வகத்தில் உள்ள புரஜெக்டர் மூலம்  ஆபாச படம் காட்டி பாடம் நடத்தியதாகவும், மேலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வகுப்பில் இருந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்து வகுப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.   

மேலும் இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில பெற்றோர்கள் ஆன்லைன் மூலமாக மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

Meera Mithun: ‛எனக்கு சூசைடு டார்ச்சர் தர்றாங்க...’ நீதிபதியிடம் கதறிய மீரா மிதுன்!

இந்தப்பிரச்சினை குறித்து அந்தப்பள்ளி மாணவிகள் கூறும்போது, இயற்பியல் ஆசிரியர் பாடம் நடத்துவதாக கூறி ஆபாச படம் காட்டி ஆபாசமாக பேசினார். மேலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபடுவதாகவும், இது அனைத்து மாணவிகளுக்கு தெரியும். வெளியில் சொன்னால் ஆசிரியர் அடித்துவிடுவார் இல்லையென்றால் பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்ற பயத்தில் யாரும் வெளியில் சொல்ல பயப்படுவதாக மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவிகள், பெற்றோர்களின் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்தப்பிரச்சனை குறித்து நாமகிரிபேட்டை காவல்துறையினர் பள்ளியில் சம்பந்தபட்ட உதவி தலைமையாசிரியரிடம்  விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெகநாதனிடம் கேட்டபோது, நேற்று வந்த மாணவ,மாணவிகளுக்கு இன்று விடுமுறை. அதனால் நாளை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை செய்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக அத்தமீறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து வருவது வேதனைக்குறியதே. 

காதலைக்கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார்.. பழிவாங்க நினைத்த தங்கையால் 2 ஆண்டுகள் சிறை!

 

 

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget