மேலும் அறிய

Crime: காதலியின் மகளை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக வன்கொடுமை.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்த வாழ்க்கை துணையின் மகளை 37 வயது நபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்த வாழ்க்கை துணையின் மகளை 37 வயது நபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்தான் இந்த வெட்கக்கேடான சம்பவம் அரங்கேறியுள்ளது. நாக்பூரில் உள்ள வகோடா பகுதியை சேர்ந்த 37 வயதான நபர், கணவரை விட்டு பிரிந்து வாழும் 32 வயது பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்றாக வாழ முடிவு எடுத்து தனியே வீடு மூவரும் தங்கியுள்ளனர். 

இந்தநிலையில், அந்த பெண்ணின் தாயார் வேலைக்கு செல்லும்போதெல்லாம், அப்பெண்ணின் 12 வயது மகளை பாலியல் ரீதியா துன்புறுத்த தொடங்கியுள்ளார். தொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. 

மிரட்டல்:

அந்த நபர் சிறுமியிடம் இதுகுறித்து உன் தாயிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால் உன்னையும், உன் தாயையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தனது காரியத்தை சாதித்துள்ளார். ஒரு வருடமாக அமைதி காத்த அந்த சிறுமி, ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாய், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

நாக்பூரில் உள்ள ஹட்கேஷ்வர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குற்றம் சாட்டப்பட்டவர் தனது 32 வயது லைவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது மகளுடன் அக்டோபர் 2022 முதல் தனது முதல் திருமணத்திலிருந்து வசித்து வந்தார். சிறுமியின் தாய் வேலைக்காக வெளியில் செல்லும் போதெல்லாம் அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்" என தெரிவித்தார். 

தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஒரு வருடமாக குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வந்ததாகவும், இதன் காரணமாக அவர் இதைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. ஆனால், கடைசியில் தைரியம் வரவழைத்த சிறுமி, சமீபத்தில் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வன்கொடுமை கிரிமினல் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை நடந்து வருகிறது.

போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

  1. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
  2. இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  3. 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget