மேலும் அறிய

வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் வந்த பெண் - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்

நாகையில் திருடப்பட்ட ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகையில் காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பெண்மணி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

பொய்கைநல்லூர் பூங்கொடி 

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதான பூங்கொடி. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. அதனை தொடர்ந்து வழக்கமாக தனது ஆடுகள் சென்று மோய்ந்து வரும் இடங்கள் மற்றும் இன்ன பிற பல்வேறு பகுதிகளில் தேடி அலைந்துள்ளார் பூங்கொடி. 

L2 Empuraan: பொட்டி வந்தாச்சு..! எம்புரானை நெம்பியெடுத்த தமிழ் ராக்கர்ஸ் - மோகன்லால், பிரித்வி ராஜ் ஷாக்


வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் வந்த பெண் - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்

ஆனால் எங்கு தேடியும் தனது ஆடு கிடைக்காததால், ஆடு திருடு போனதை அவர் உணர்ந்தார். அதனை அடுத்து ஆட்டினை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்று எண்ணியுள்ளார். கத்திரிக்காய் முற்றினால், சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற பழமொழியை அறிந்த அவர், தனது ஆடு எப்படியும் கசாப்பு கடையில் தான் இருக்கும் என்பதை யூகித்து கொண்டார்.

கறிக்கடையில் தொங்கிய ஆடு

தொடர்ந்து அருகில் உள்ள கல்லார் பகுதியில் உள்ள ஒரு ஆட்டிறைச்சி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு தனது ஆடு வெட்டப்பட்டு தலை தனியாக, உடல் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை பார்த்து கோபமடைந்த பூங்கொடி கசாப்பு கடைக்காரரான செய்யது அகமதுவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தனது ஆட்டின் தலையையும், உடலையும் பூங்கொடி கேட்டுள்ளார். அதனை தர மறுத்த செய்யது அகமது, பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

Annamalai to Delhi: டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...


வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் வந்த பெண் - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்

ஆட்டுத்தலையுடன் காவல்நிலையத்தில் புகார் 

இதைத் தொடர்ந்து அந்த ஆட்டின் தலையை கடையில் இருந்து பறித்து எடுத்துக்கொண்டு பூங்கொடி அங்கிருந்து நாகப்பட்டினம் டவுன் காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். கையில் ஆட்டின் தலையுடன் பெண் வருவதை பார்த்த போலீசார் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் நாகை டவுன் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் வழக்குப்பதிவு செய்து கறிக்கடை கடைக்காரரான செய்யது அகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trump on TIKTOK: சீனா அந்த விஷயத்த பண்ணா வரிய குறைக்கறேன்.. ட்ரம்ப் போட்ட ‘அந்த‘ கன்டிஷன் என்ன.?

நாகையில் பரபரப்பு 

காணாமல் போன ஆடு திருடப்பட்டு வெட்டப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கவந்த பெண்மணி அடையாளம் காட்டுவதற்காக வெட்டப்பட்ட ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்திற்கு வந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Embed widget