(Source: ECI/ABP News/ABP Majha)
மூதாட்டி கொலை வழக்கில் உதவிய நாய்: பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்த காவல்துறை
மூதாட்டியை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்து உதவிய மோப்ப நாய்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதக்கம் அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தகரை வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்த 58 வயது பாபு என்ற மூதாட்டி கடந்த ஞாயிறு அன்று கொலை செய்யப்பட்டார். வீட்டிலிருந்த அனைவரும் திருமணத்தில் பங்கேற்க வெளியூர் சென்றுவிட்ட நிலையில் பாபு மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி விட்டார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது அது கொலை நடந்த இடத்தில் இருந்து ஓடிச்சென்று அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கவ்விப்பிடித்தது.
Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?
அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் அப்போது நகைக்காக மூதாட்டியை கொன்றதை ஒப்புக்கொண்டார் இதையடுத்து கார்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12,600 ரூபாய் ரொக்கம் மற்றும் 6 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கொலை வழக்கில் 12மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த உதவியை மோப்ப நாய் ராக்கியை காவல்துறையினர் கௌரவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மோப்பநாய் ராகிக்கு பதக்கம் அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
Mamata Flight Faces Mid-Air Turbulence: விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய மம்தா!நடந்தது என்ன?
ABP CVoter Exit Poll 2022| 5 மாநிலங்கள் யாருக்கு?... ABP-C Votersன் மாபெரும் கருத்துக் கணிப்பு
விழுப்புரம் மாவட்ட காவல் துறை பராமரிப்பில் உள்ள மோப்ப நாய் ராக்கி இதுவரை 9 கொலை வழக்குகள் உள்ளிட்ட 25 குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி உள்ளது. களத்திரம்பட்டில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொலையானது, விழுப்புரம் ரயில் நிலையம் அருகே மனநலம் பாதித்த பெண் கொலை வழக்கு, தியாகதுருகம் அருகே பள்ளி மாணவன் கொலை வழக்கு ஆகியவற்றில் மோப்ப நாய் ராக்கி திறமையாக துப்பு துலக்கி உள்ளது. அதற்காக இதுவரை 5 முறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் மடலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்