கோவையில் வடமாநில இளைஞர் கொலை: 10 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்... காரணம் தெரியுமா?
கோவையில் திருட முயன்றதாக கூறி வட மாநில இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கில் 10 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், ஆலந்துறை சித்திரைச் சாவடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள், பலத்த ரத்த காயங்களுடன் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு இந்திய தண்டனை சட்டம் 174 பிரிவில் பதியப்பட்டது. மேலும் காவல் துறை நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகின.
அதில், ஆலந்துறைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது பண்ணையில் திருட முயன்றதாக 35 வயது வட மாநில இளைஞரை கட்டி வைத்து அந்த பகுதி மக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. மேலும், உயிர் இழந்த இளைஞரின் சடலத்தை ஆற்றில் தூக்கி எறிந்து மறைக்க முயற்சித்ததும், விசாரணையில் தெரிய வந்தது.
10 #farmers were arrested for allegedly murdering a migrant worker from north India in #Coimbatore for trespassing onto the farm and attempting to steal something.#migrantlabourer @NewIndianXpress https://t.co/VR8rIqSvRW
— TNIE Tamil Nadu (@xpresstn) January 13, 2022
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறை அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில், சிறப்பு உதவியாளர் கனகராஜ் மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவரையும் ஆயுத படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார்.
பிற மாநிலத்தவர்கள், தமிழ் தவிர அனைத்து பிற மொழிகளை பேசும் பல இனத்து மக்களும் போதை பாக்குகள் போடும் மக்கள் கூட்டம் என நாம் இருப்பது தமிழ்நாடா இல்லை, பிற மாநிலமா என என்ற சந்தேகம் நமக்கே வந்து விட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் பிற மாநிலத்தவரின் வருகையால் திணறி வரும் நிலையில், குற்றம் புரிவதற்காக தமிழகத்தில் கால் வைக்கும் பிற மாநிலத்தவரின் செயல்களால் தமிழக மக்கள் அனைவருமே கலக்கத்தில் தான் உள்ளனர். சுமார் பத்து லட்சம் வட மாநிலத்தவர் தமிழகத்தில் தங்கி இருப்பதாக கருதப்படுகிறது. இது தவிர நாள் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கானவர்கள் தினமும் தமிழகம் நோக்கி படை எடுத்து வருகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் என வர்த்தக பகுதிகள் வட மாநிலத்தவர்களின் வியாபார மையங்களாக உருவாகும் அளவிற்கு தமிழகம் வாழ வைக்கிறது. தொழிலுக்காக வந்தவர்கள் சொந்த மாநிலமாக தமிழகத்தை கருதி வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















