மேலும் அறிய

குழந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்...! - தாக்குதலின் பின்னணியில் கள்ளக்காதலன்...!

பிரேம்குமாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் அளித்ததால் கள்ளக்காதலனை கைது செய்ய சத்தியமங்கலம் போலீசார் சென்னை விரைந்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பெற்ற குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து குழந்தையை தாக்கிய தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார். 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், துளசியிடம் விசாரணை நடத்த ஆந்திராவுக்கு சென்றனர். இதனிடையே, தவறான நடத்தையால், துளசி தமது குழந்தையை தாக்கி வீடியோ எடுத்ததாக, குழந்தையின் தந்தை தரப்பு தெரிவித்துள்ளது.

குழந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்...! - தாக்குதலின் பின்னணியில் கள்ளக்காதலன்...!

இந்தநிலையில்  குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியில் தனது தாய் வீட்டில் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில் கள்ளக்காதலன் சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தான் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் அளித்தார். இந்தநிலையில் சென்னையை சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமாரை கைது செய்ய சத்தியமங்கலம் போலீசார் ஆறு பேர் கொண்ட தனிப்படை விரைந்தது .

குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் போலீஸ் நடவடிக்கை  எடுத்துள்ளனர். குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குழந்தையை தாயே கொடுமைப்படுத்தும், பதறவைக்கும் வைரல் வீடியோ : எப்படி இருக்கிறது குழந்தை?

குழந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்...! - தாக்குதலின் பின்னணியில் கள்ளக்காதலன்...!

முன்னதாக, குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் சமூக வலைதளங்களில் வைரலானார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும் 2016 ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்யப்பட்டது. இந்நிலையில் 3 வருடமாக சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் 2019 காலகட்டத்தில் இவர்கள் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்திற்கு குடி வந்தனர். சில நாட்களாக வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் வடிவழகன் மனைவி துளசியிடம் சண்டையிட்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

குழந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்...! - தாக்குதலின் பின்னணியில் கள்ளக்காதலன்...!

பிரதீப் என்கிற ஒன்றரை வயது குழந்தை மற்றும் கோகுல் என்ற 3 வயது ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஒன்றரை வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மணலப்பாடி கிராமத்தில் விசாரிக்கச் சென்றபோது இது சம்பவம் மூன்று மாதத்திற்கு முன்னதாக நடந்ததாகும், அவள் மேல் சந்தேகம் ஏற்பட்டு கேள்வி கேட்டதால், அவருடைய தாய் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். பின்பு அவருடைய செல்போன் வீட்டில் இருந்த நிலையில் அதை எடுத்துப் பார்க்கும்போது அதிலுள்ள வீடியோக்களில் குழந்தையை கொடுமைப்படுத்திய சம்பவங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குழந்தையை தாக்கிய கொடூர தாய்.. ஆந்திராவுக்கு தேடிச் சென்று கைது செய்த போலீசார்!

சினிமா பாணியில் சிறுவன் கடத்தல் : துப்பு கிடைத்த 24 மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை.. எப்படி?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget