மேலும் அறிய

தாய், மகளிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த திருடர்களை 3 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்...!

புதுச்சேரி: திருமண வீட்டில் தாய், மகளைக் கட்டிப்போட்டு நகை,பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கத்தி முனையில் கொள்ளைடித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மடுகரை பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் பிரேமா (32), லாஸ்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தர் வீதியில் தனது தாய் புஷ்பலதா (56) உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரேமாவுக்கு வரும் 20ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 36 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பிரேமா தனது வீட்டில் வைத்திருந்தார். இதனிடையே அடிக்கடி தாய், மகள் இருவரும் திருமண வேலை சம்மந்தமாக வெளியே சென்று விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இருவரும் வீட்டில் சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது,

தாய், மகளிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த திருடர்களை 3 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்...!

அதிகாலை அவர்களது அறைக்குள் திடீரென நுழைந்த 2 முகமூடி அணிந்த நபர்கள் தாய், மகள் இருவரையும் கத்தி முனையில் மிரட்டி கயிற்றால் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். மேலும் சத்தம் போடாத வகையில் இருவரது வாயிலும் துணியை கொண்டு அடைத்தார். பின்னர் பீரோ சாவியை பறித்த அவர்கள் அதனை திறந்து அதிலிருந்த 36 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் 12 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். பின்னர் வாயில் அடைத்திருந்த துணியை அகற்றிய பிரேமா, வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பற்றி  தனது சசோதரர் குமரனுக்கு தகவல் தெரிவித்தார்.

தாய், மகளிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த திருடர்களை 3 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்...!

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வீட்டினுள்ளேயே பதுங்கியிருந்து கொள்ளையர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து தாய், மகளிடம் போலீஸார் விசாரித்த நிலையில், அதில் ஒருவரின் குரல் மட்டும் ஏற்கனவே தாங்கள் கேட்ட குரல்போல் இருப்பதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

தாய், மகளிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த திருடர்களை 3 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்...!

இதனையடுத்து போலீசார்  தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக லாஸ்பேட்டையைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி அய்யனார் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பிரேமா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அய்யனார் அவ்வப்போது பிரேமா வீட்டில் ஏதேனும் வேலைகள் இருந்தால் அங்கு சென்று செய்வது வழக்கம். அதுபோல் சென்ற போது தான் பிரேமாவின் திருமணத்துக்கு நகைகள் வாங்கி வைத்திருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோட்டகுப்பத்தைச் சேர்ந்த அபினாஷ் (23) என்பவருடன் சேர்ந்து பிரேமா வீட்டில் கொள்ளையடித்து தெரியவந்தது.

தாய், மகளிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த திருடர்களை 3 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்...!

பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 36 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 12 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள் கொள்ளையர்களை உடனே கைது செய்த லாஸ்பேட்டை சீனியர் எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா பாராட்டினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget