மேலும் அறிய

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?

சுங்க அதிகாரிகளும் இணைந்து, கடத்தல் பயணியை கைது செய்ததோடு, அந்தப் பயணியின் செலவில், கடத்தல் குரங்கு குட்டிகளை மீண்டும், தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திவரப்பட்ட அரிய வகை,2  மேற்கு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வன குற்ற பிரிவினரும், சுங்க அதிகாரிகளும் இணைந்து, கடத்தல் பயணியை கைது செய்ததோடு, அந்தப் பயணியின் செலவில், கடத்தல் குரங்கு குட்டிகளை மீண்டும், தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
 
தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி  கொண்டு இருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 32 வயது ஆண் பயணி  ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு திரும்பி வந்தார். அவர் இரண்டு பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தார். சுங்க  அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளுக்கு திருப்திகரமாக இல்லை.
 
இதை அடுத்து அந்த பயணியை சுங்க அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர். அவருடைய உடமைகளை சோதித்த போது உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனால் அவர் வைத்திருந்த இரண்டு பிளாஸ்டிக் கூடைகளில், அறிய வகை குரங்கு குட்டிகள் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.  மேற்கு ஆப்பிரிக்க வனப்பகுதியில், அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கக்கூடிய சூட்டி மங்காவே  மற்றும் காலர்டு மங்காவே என்ற 2  ஆப்பிரிக்கா வகை அரிய குரங்கு குட்டிகள், அவர் வைத்திருந்த கூடைகளுக்குள் இருந்தன. இதை அடுத்து சுங்க  அதிகாரிகள் அவரை வெளியில் விடாமல் சுங்க அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
 
அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆப்பிரிக்க வகை குரங்குகள் மிகவும் ஆபத்தானவை. இவைகள் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் நிறைந்த வகைகள். இந்த வகை குரங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு, அனுமதியே கிடையாது. மேலும் இந்த பயணி முறையான எந்த அனுமதியும் இல்லாமல், இந்த 2 குரங்குகளையும் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 
 

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
இதை அடுத்து இந்த குரங்குகளை கடத்தி வந்த அந்தப் பயணியை சுங்க அதிகாரிகளும், ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் இணைந்து கைது செய்தனர். அதோடு இந்த இரண்டு குரங்குகளையும், மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கும் முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவுகளை, இந்த குரங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த கடத்தல் பயணியிடம், வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.இந்த அரிய வகை குரங்குகளை எதற்காக இவர் தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? இந்தக் குரங்குகளை யார் கடத்தி வர சொன்னார்கள்? என்று தொடர்ந்து சுங்க மற்றும் ஒன்றிய வன குற்றப்பிரிவு அதிகாரிகள் கடத்தல் அசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget