மேலும் அறிய
திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணம், ஆவணங்கள் திருட்டு - சிசிடிவியில் பதிவான காட்சி
திண்டிவனம் நேரு வீதியில் பழைய கோர்ட் எதிரே அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் மற்றும் ஆவணங்களை 2 பேர் திருடிச்செல்லும் காட்சி சிசிடியில் பதிவாகியுள்ளது

சிசிடிவி காட்சி வெளியீடு
திண்டிவனம் நேரு வீதியில் பழைய கோர்ட் எதிரே அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம்மற்றும் ஆவணஙகளை 2 பேர் திருடிச்செல்லும் காட்சி சிசிடியில் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கொத்தனார் நேரு வீதியில் பில்டிங் கட்டும் வேலை செய்து வருகிறார் தன் சொந்த தேவைக்காக பணம் மற்றும்பத்திரம் ஆவணங்கள் எடுத்து கொண்டு வந்தார்.

திண்டிவனம் பழைய கோர்ட் எதிரே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் மதியம் உணவுக்காக வந்து அவரது வாகனத்தை பார்க்கும் போது இருசக்கர வாகனத்தில் சைடில் இருந்த பெட்டி உடைந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அங்கு வந்த 2 பேர் இருசக்கர வாகனத்தின் டிக்கியை திறந்து அதில் இருந்த ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை செல்வது அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டில் இருந்து பணம் மற்றும் ஆவணம் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















