மேலும் அறிய

Duraimurugan: அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: போலீசார் விசாரணை

பாரதி காட்பாடியில் கணவர் ராஜ்குமார், இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ராஜ்குமார் அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகன் அரசியல் களத்தில் அனைத்து கட்சியினரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவர். இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். துரைமுருகன் காட்பாடியில் வசித்து வரும் நிலையில், இவருடைய அண்ணன் துரை மகாலிங்கம் கடந்த ஆண்டு மரணமடைந்தார். 

இவரது மகள் பாரதி காட்பாடியில் கணவர் ராஜ்குமார், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். ராஜ்குமார் அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே காட்பாடி அருகேயுள்ள லத்தேரி தண்டவாளத்தில் நேற்று முன்தினம் உடல் துண்டான நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்காக உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டது அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாரதி தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திமுக தொண்டர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Embed widget