மேலும் அறிய

கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

வைத்தீஸ்வரன் கோயிலில் கடைக்கு வந்த ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் சரமரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே மண்ணிப்பள்ளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தம்பிதுரை. இவரின் மகன் அருண் வயது 35.இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளதை அடுத்து இவர் பெயர் மணல்மேடு காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது. இந்நிலையில் அருண் வைத்தீஸ்வரன்கோயில் தெற்குவீதியில் ஒரு சந்து பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அருணையை அரிவாளால் தலை மற்றும் கால், கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர். 

கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

இரத்தவெள்ளத்தில் சரிந்த கீழே விழுந்த அருண் குறித்து அருகில் இருந்தவர்கள் வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வைதீஸ்வரன் கோயில்  காவல்துறையினர் உயிருக்கு போராடிய அருணை மீட்டு சிகிச்சைகாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலைய காவலர்கள் கொலை முயற்சி சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரவுடியிசம்,கொலை சம்பவங்கள் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொலை, கொள்ளை, ரவுடிசம் தலைதூக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்த போது அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இல்லாத நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை என ஏராளமான குற்றச்செயல் நடைபெற்று பல வழக்குகள் பதிவாகின.

கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

இதனால் கள்ளச்சாராயம் தொடர்பாகவும், தற்போது அரசால் சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களுக்கும், அதனை எதிர்க்கும் மீனவ கிராமங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இந்த இரு பிரச்சினைகளில் மயிலாடுதுறை மாவட்டம் காவல்துறையினர் முழு மூச்சில் ஈடுப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் மீதம் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் போதிய காவலர்கள் இன்றி கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் கூடுதல் காவலர்களை நியாயம் செய்து மாவட்டத்தில் உள்ள காவலர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பி குற்ற சம்பவங்கள் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget