மேலும் அறிய

உருது வகுப்பில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! - ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை !

35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

மும்பையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆசிரியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மும்பையில் உருது வகுப்புகளை நடத்தி வந்த மௌலவி என அழைக்கப்படும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுள் ஒருவரான 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவத்தன்று அந்த 8 வயது பெண் குழந்தையை , அவரது சித்தி ( மாற்றாந்தாய்) மதிய வகுப்பிற்கு தயாராகுமாறு கூறியிருக்கிறார். அந்த பெண் பயந்து அழுதுக்கொண்டே , நான் வகுப்பிற்கு செல்லமாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். இது குறித்து அந்த குழந்தையின் சித்தி விசாரித்த பொழுதுதான் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவத்தை அந்த குழந்தை தெரிவித்திருக்கிறார். உருது கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் மௌலவி  தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் , அதனால் தனக்கு ஏற்பட்ட வலி இருப்பதையும் குழந்தை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.அதிர்ந்து போன அப்பெண்ணின் சித்தி , காவல்துறையில் அந்த நபரின் மீது புகார் அளித்துள்ளார்.


உருது வகுப்பில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! - ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை !
வினோபா பாவே மார்க் காவல் நிலையத்தில் மௌலவிக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே மௌலவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக  நடைப்பெற்ற நிலையில் அரசு வழக்கறிஞர் வீணா ஷெலர் 10  சாட்சியங்களை விசாரித்தார். மேலும் சில சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில் மௌலவி  பாதிக்கப்பட்ட பெண் குழந்தையையும் அவரது சகோதரியையும் பின் தொடர்ந்து செல்வதை காண முடிந்துள்ளது. இது குறித்து குற்றவாளி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , அவரை பொய்யாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் , அவர் ஒரு  மௌலவி  அல்ல , சாதாரண தையல்காரர் என கூறினர். இதற்கான சாட்சியங்களை முன் வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் , அவர் மாணவர்களுக்கு உருது வகுப்புகள் எடுக்கும் சில சிசிடிவி காட்சிகளை எடுத்து வைத்தார்.


இந்த வழக்கு விசாரணையில் அந்த உருது ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது உறுதியான நிலையில் , 35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியர் என்ற போர்வையில் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட மௌலவியின் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கோபத்தையும் , ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , அவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கேட்டறிவது அவசியம்.

தலைப்பு செய்திகள்

பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
Embed widget