ஓட்டலில் தீர்ந்து போன பீப் கறி: ஆத்திரமடைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்; கண்டக்டர் பலி!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே மூலமட்டும் (Moolamattum )பகுதியை சேர்ந்தவர் பிலிப் மார்ட்டின் (26).
ஓட்டலில் பீப் கறி தீர்ந்து போனதால் ஆத்திரமடைந்த வாலிபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கண்டெக்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே மூலமட்டும் (Moolamattum )பகுதியை சேர்ந்தவர் பிலிப் மார்ட்டின் (26).
இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மூலமட்டும் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவு கடையில் சாப்பிட சென்றார். அப்போது, மாட்டிறைச்சி குழம்பு கேட்டுள்ளார். அதற்கு அந்த கடைக்காரர், குழம்பு தீர்ந்து விட்டது எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபருக்கு பீப் குழம்பு வேண்டும் என்று உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால், கடை உரிமையாளருக்கும், அந்த இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கோபத்துடன் உடனே, காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து ஓட்டலில் இருந்தவர்கள் மீது மார்ட்டின் சுட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாயவில்லை. அங்கு இருந்தவர்கள் கல்லால் அடித்ததால் தப்பியோடிய மார்ட்டின், எதிரில் பைக்கில் வந்த பஸ் கண்டக்டரான சனல் பாபு (34), அவரது நண்பர் பிரதீப் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், சனல் பாபு சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரதீப் படுகாயம் அடைந்தார். மார்ட்டின் காரில் ஏறி தப்பினார். படுகாயம் அடைந்த பிரதீப், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மார்ட்டினை முட்டம் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, லைசென்ஸ் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து கடை உரிமையாளர் செளமியா கூறுகையில், குடிபோதையில் இறந்த அவர், இரவு 10 மணியளவில் எங்கள் உணவகத்திற்கு பைக்கில் வந்து மாட்டிறைச்சி கறி கேட்டார்கள். எங்கள் ஊழியர்கள் மாட்டிறைச்சி கறி முடிந்தது என்று சொன்னார்கள். அவர்கள் ஊழியர்களை வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர். அப்போது சில வாடிக்கையாளர்கள், இது பெண்களால் நிர்வகிக்கப்படும் கடை என்பதால் இதுபோன்ற கேவலமான கருத்துகளை கூற வேண்டாம் என்று கூறினார்கள்”
"குற்றவாளி காவலில் உள்ளார், அவர் பயன்படுத்திய துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். மார்ட்டின் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கேரள போலீசார் கூறினார்.
கேரளாவில், மாட்டிறைச்சி மிகவும் பிரபலமான, சுவையான உணவாகும், மேலும், மக்கள் உட்கொள்ளும் மொத்த இறைச்சியில் 60 சதவீதம் பீப் சாப்பிடுபவர்கள்.