Crime: நான் யார் தெரியுமா..? கதைகதையாய் விட்டு பல லட்ச மதிப்புள்ள பொருட்களை சுருட்டிய ஆசாமி.. உஷார்
டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் நான்கு மாதங்கள் தங்குவதற்காக அபுதாபி அரச குடும்பத்தின் ஊழியர் போல் நடித்து, ரூ 23 லட்சத்தை சுருட்டிய நபர் மாயமானார்.
டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் நான்கு மாதங்கள் தங்குவதற்காக அபுதாபி அரச குடும்பத்தின் ஊழியர் போல் நடித்து, ரூ 23 லட்சத்தை சுருட்டிய நபர் மாயமானார்.
கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி, 14) லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரின் பேரில் மோசடி மற்றும் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட முகமது ஷெரீப்பை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி லீலா பேலஸின் 427ஆம் எண் அறைக்கு தங்க வந்த ஷெரீப், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி நைசாக வெளியேறி உள்ளார். அதிலும் குறிப்பாக அந்த அறையில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் முத்துத் தட்டு உட்பட பல பொருட்களை அவர் திருடிச் சென்றதாக ஹோட்டல் ஊழியர்கள் போலீசாரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹோட்டலுக்கு வந்தபோது, ஷெரீப் ஊழியர்களிடம் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர் என்றும், அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஃபலாஹ் பின் சயீத் அல் நஹ்யானுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாகவும் கூறினார்.
அவர் ஷேக்குடன் தனிப்பட்ட முறையில் பணிபுரிந்ததாகவும், உத்தியோகபூர்வ வேலைக்காக இந்தியாவில் இருப்பதாகவும் கூறினார். அவர் தனது பொய்யை உறுதிப்படுத்த ஒரு வணிக அட்டை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை அட்டை மற்றும் பிற ஆவணங்களை கூட போலியாக தயாரித்து காண்பித்து இருப்பதாக சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் கழித்த கடந்த கால தனது வாழ்க்கையைப் பற்றி ஹோட்டல் ஊழியர்களுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் அவர் உண்மையிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தான் வந்துள்ளார் என ஹோட்டல் நிர்வாகமும் ஊழியர்களும் கருதியுள்ளனர். இந்த ஆவணங்கள் போலியானவை என சந்தேகிக்கப்படும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர் தங்கியிருந்த நான்கு மாதங்களில் அறை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கான கட்டணத்தொகை ரூ 35 லட்சம். அதில் ரூ 11.5 லட்சத்தை செலுத்திய அவர் , மீதியை செலுத்தாமல் சென்று விட்டார். கடந்த நவம்பர் 20-ம் தேதி ஓட்டலில் இருந்து தப்பியோடிய நாளில் ஊழியர்களிடம் ரூ 20 லட்சத்துக்கான காசோலையை கொடுத்துள்ளார். அந்த நபரை அடையாளம் காண டெல்லி போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.