மேலும் அறிய

Crime: பிறப்புறுப்பில் குத்தி, கண்களை பிடுங்கி, மனைவி மீது கொடூர தாக்குதல் - கணவன் ஆத்திரத்திற்கான காரணம் என்ன?

Crime: கத்தியால் குத்தி கண்களை பிடுங்கி மனைவியை கணவனே கொடூரமாக தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Crime: மனைவியின் அந்தரங்க பாகங்கள் உட்பட பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதாக கணவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்:

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில், தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த, கணவர் அந்த பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்த நபர் கத்தியால் குத்தி, மனைவியின் இரு கண்களையும் பிடுங்கி எறிந்ததாகவும், அவரது அந்தரங்கப் பகுதிகள் உட்பட பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

புதன்கிழமை போஹ்ரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சோட்டு கான் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தனது மனைவியின் மொபைல் போனை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மனைவியைத் தாக்கிய பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில் பெண்:

பாதிக்கப்பட்ட பெண் அலறல் சத்தக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த பிறகுதான், அவர் இரத்த வெள்ளத்தில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தற்போது போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், தலைமறைவான கணவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.

மனைவியை பழிவாங்கிய கணவன்:

இதனிடையே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிறையில் இருந்து வெளியே வந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகளைக் கொன்றுவிட்டு, வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் டீசல் என்ஜின் உதவியாளராக பணிபுரிந்த அந்தப் பெண், தனது முதல் கணவரின் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இரண்டாவது கணவர் மீது புகாரளித்தார். அதன் பிறகு, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே அந்த நபர் இருவரையும் கொலை செய்துள்ளார். இறந்தவர்கள் ஜூலி தேகா, அவரது 15 வயது மகள் மற்றும் லோஹித் தாகுரியா (47) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget