மேலும் அறிய

மனைவி இறந்த சோகத்தில் வளர்ப்பு நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்

மனைவி இறந்த நிலையில் நன்றியுடன் தன்னுடன் இருந்த வளர்ப்பு நாய் மீது அவர் அதிக பாசம் காட்டி வளர்த்து ‌ வந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொசப்பாளையம் சின்ன சாயக்காரத் தெருவில் வசித்து வந்தவர் ராகு வயது (45). இவர் சேலத்தை சேர்ந்தவர்‌. இவர் தனது மனைவியுடன் ஆடைகளை தைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர்களுடன் செல்லப்பிராணி ஆண் நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடன் சுமை இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்பு இவருடைய மனைவி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் ரகு மட்டும் வீட்டில் சோகத்துடன் ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தார். மனைவி இறந்த நிலையில் நன்றியுடன் தன்னுடன் இருந்த வளர்ப்பு நாய் மீது அவர் அதிக பாசம் காட்டி வளர்த்து ‌ வந்துள்ளார். இந்த நிலையில் ரகுவுக்கு கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்து விட்டால் தான் வளர்த்து வந்த நாய் தெரு நாயாகி அனாதையாகிவிடுமே என நினைத்த அவர் நாயையும் தூக்கில்போட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நாயின் கழுத்திலும் தனது கழுத்திலும் கயிறை மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதில் ரகு நாயுடன் இறந்து விட்டார். கடந்த ஒரு வாரமாகவே அவரது வீடு உள்புறமாக மூடப்பட்டுள்ளது.  ரகுவின் வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.டி.அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக அதுபற்றி ஆரணி நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் துணை ஆய்வாளர் சுந்தரேசன் தலைமையில் காவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரகு தனது வளர்ப்பு நாயுடன் மின்விசிறியில் தூக்குப்போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் ரகு உடலையும் இறந்து கிடந்த நாயையும் தூக்கிலிருந்து இறக்கினர்.

மனைவி இறந்த சோகத்தில் வளர்ப்பு நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்

அதன்பின் ரகு உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடை தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மட்டுமல்லாமல் வளர்ப்பு நாயையும் பிரிய மனமின்றி அதனையும் தன்னுடன் தூக்குப்போட்டுக்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Embed widget