மேலும் அறிய

Varichiyur Selvam Arrest: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கொலை வழக்கில் கைது

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் மீது காவல்நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கொலை வழக்கு ஒன்றில் வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போலீசார் கைது செய்தனர்.

வரிச்சியூர் செல்வம் கைது

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தவர் செந்தில். இவருக்கும், வரிச்சியூர் செல்வத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இந்த நிலையில், வரிச்சியூர் செல்வம் அழைப்பதாக செந்திலின் மனைவி முருகலட்சுமிக்கு அழைப்பு வந்துள்ளது. அதன்பின்பு, சென்ற செந்தில் கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வரிச்சியூர் செல்வத்தை இன்று கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது வரிச்சியூர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மீது கொலை வழக்கு, கட்டப்பஞ்சாயத்து வழக்கு, ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. தொடக்க காலத்தில் ரவுடியாக உலா வந்த இவர் திருந்தி வாழ விரும்புவதாக காவல்துறையினரிடம் உறுதி அளித்தார். இவர் மீது என்கவுன்டர் நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல்கள் உள்ளது. இதன்பின்னரே, அவர் திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் உத்தரவாதம் அளித்தாகவும் கூறப்படுகிறது.

உடல் முழுக்க தங்க நகைகள்:

அதன்பின்பு உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டு பொது இடங்களில் உலா வரும் இவர் பிரபலமாகவே மாறிப்போனார். உடல் முழுவதும் கிலோகணக்கில் நகைகளை அணிந்து கொண்டு உலா வரும் வரிச்சியூர் செல்வத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. தான் அணிந்திருக்கும் நகைகளுக்கு முறைப்படி வருமான வரி கட்டியுள்ளதாக விளக்கம் அளித்துள்ள வரிச்சியூர் செல்வத்தின் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி அளித்த வரிச்சியூர் செல்வம், தான் ரவுடி இல்லை என்றும், அது எல்லாம் சிறிய வயதில் நடந்து முடிந்துவிட்டது என்றும், தற்போது பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதாகவும் கூறியிருந்தார். மேலும், அந்த பேட்டியில் கடந்த 8 ஆண்டு காலத்தில் மட்டும் வழக்கறிஞர்களுக்காக மட்டும் ரூபாய் 7 கோடி செலவழித்ததாக கூறியிருந்தார்.

ஆடம்பர கார், சுற்றுப்பயணம் என்று ஆடம்பரமாக உலா வரும் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் வரிச்சூரான் வகையறா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Crime: சிதைந்த நிலையில் கிடைத்த பெண்ணின் உடல்.. நண்பனே கொலை செய்த கொடூரமா? பயங்கரம்..

மேலும் படிக்க: Aarudhra Chargesheet :ஆருத்ரா வழக்கின் நிலவரம் என்ன ? அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்ற காவல்துறை .. பணம் திரும்ப கிடைக்குமா ?

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget