Madurai: உசிலம்பட்டி அருகே கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை - 3 பேர் கைது
184 கேரள லாட்டரி சீட்டுகளையும், 23 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பஜார் பகுதியில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எழுமலை காவல் நிலைய போலீசார் எழுமலை பஜார் பகுதி, புல்லுக்கடை மைதானம், தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது பஜார் பகுதியில் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த எழுமலையைச் சேர்ந்த சிங்கராஜ், ராமராஜன், ராஜேந்திரன் என்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 184 கேரள லாட்டரி சீட்டுகளையும், 23 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















