மேலும் அறிய

மதுரையில் போலீஸ் கொடூர கொலை; கம்பத்தில் கொலையாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

மதுரையில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் நேற்று முன்தினம் டாஸ்மார்க் கடை அருகில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலின்போது காவலருடன் உடனிருந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலரின் உடல் வைக்கப்பட்டிருந்த, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டியில் போராட்டம்

தொடர்ந்து உடற்கூறாய்வு முடிந்த காவலரின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், பார்வட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கதிரவன், பார்வட் ப்ளாக் தலைவர் முருகன் ஜீ தலைமையிலான நிர்வாகிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மட்டுமல்லாது உசிலம்பட்டி தேவர் சிலை முன்பும் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அஷிஷ் ராவத், உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் 

இந்த சூழலில் இன்று திமுக சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உசிலம்பட்டி திமுக நிர்வாகிகள் உறுதியளித்தை அடுத்து காவலரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு காவலரின் பூத உடல் கொண்டு செல்லப்பட்டு விருதுநகர் மாவட்ட எஸ்.பி., கண்ணன் தலைமையில் காவல்துறையின் அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. விரைவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் போலீஸ் கொடூர கொலை; கம்பத்தில் கொலையாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு

துப்பாக்கி சூடு

இந்த நிலையில், தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் கம்பம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதன் அடிப்படையில் கம்பம் பகுதியில் கொலையாளிகள் அடையாளம் கண்டு பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், கொலையாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பொன்வண்ணன் (35) என்பவருக்கு காலில் அடிபட்டது.  இரண்டு பேர் தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் போலீசார்  ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Hindi Ban: பரபரப்பு.. தமிழ்நாட்டில் இந்திக்கு தடையா? உண்மையை உடைத்த தமிழக அரசு
Hindi Ban: பரபரப்பு.. தமிழ்நாட்டில் இந்திக்கு தடையா? உண்மையை உடைத்த தமிழக அரசு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Arasan Promo: சத்தியமா சொல்றேன்.. வொர்த்.. ரசிகர்களுக்கு திடீர் கோரிக்கை வைத்த சிம்பு - என்ன?
Arasan Promo: சத்தியமா சொல்றேன்.. வொர்த்.. ரசிகர்களுக்கு திடீர் கோரிக்கை வைத்த சிம்பு - என்ன?
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கல்.. கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கல்.. கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நீ நினைக்கிறது நடக்காது” மௌனம் கலைத்த மாதம்பட்டி! ஜாய் க்ரிசில்டாவுக்கு பதிலடி
இனி தான் ஆட்டமே... கொட்டப் போகும் பருவமழை! தீபாவளி நிலைமை என்ன?
ரிதன்யா புது ஆடியோ? கணவர் பகீர் புகார்! தோழிகளிடம் பேசியது என்ன?
Bihar Election | NDA கூட்டணியில் சலசலப்பு நிதிஷ்குமாரை ஒதுக்கும் பாஜக? அதிருப்தியில் JDU நிர்வாகிகள்
”இவெரல்லாம் ஒரு பொதுச்செயலாளரா? புஸ்ஸி ஆனந்தை நீக்குங்கள்” விரிச்சுவல் வாரியர்ஸ் போர்க்கொடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hindi Ban: பரபரப்பு.. தமிழ்நாட்டில் இந்திக்கு தடையா? உண்மையை உடைத்த தமிழக அரசு
Hindi Ban: பரபரப்பு.. தமிழ்நாட்டில் இந்திக்கு தடையா? உண்மையை உடைத்த தமிழக அரசு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Arasan Promo: சத்தியமா சொல்றேன்.. வொர்த்.. ரசிகர்களுக்கு திடீர் கோரிக்கை வைத்த சிம்பு - என்ன?
Arasan Promo: சத்தியமா சொல்றேன்.. வொர்த்.. ரசிகர்களுக்கு திடீர் கோரிக்கை வைத்த சிம்பு - என்ன?
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கல்.. கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கல்.. கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Diwali In Pakistan: பாகிஸ்தானில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!
Diwali In Pakistan: பாகிஸ்தானில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!
உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம்; மாணவர்கள் உதவித்தொகை சிக்கல்: உடனடி தீர்வு காணப்படுமா?
உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம்; மாணவர்கள் உதவித்தொகை சிக்கல்: உடனடி தீர்வு காணப்படுமா?
150 நாட்களில் 150க்கும் அதிகமான ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள்.. அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை புது சாதனை
150 நாட்களில் 150க்கும் அதிகமான ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள்.. அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை புது சாதனை
6 பொருளை மட்டும் தூக்கி போடுங்க! இந்த தீபாவளி உங்களுக்கு தான்.. அப்படி என்னவா இருக்கும்?
6 பொருளை மட்டும் தூக்கி போடுங்க! இந்த தீபாவளி உங்களுக்கு தான்.. அப்படி என்னவா இருக்கும்?
Embed widget