Nagercoil Kasi : 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள்... ஆதாரங்களை அழித்த நாகர்கோயில் காசியின் தந்தை... ஜாமீன் மறுப்பு!
இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த காசியின் லேப்டாப்பில் உள்ள ஆதாரங்களை அழித்த வழக்கில் தந்தை தங்கபாண்டியன் ஜாமின் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து உத்தரவிட்டுள்ளது.
![Nagercoil Kasi : 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள்... ஆதாரங்களை அழித்த நாகர்கோயில் காசியின் தந்தை... ஜாமீன் மறுப்பு! Madurai High Court rejects Thangapandian's bail plea in case of destruction of evidence in Nagercoil Kasi's laptop Nagercoil Kasi : 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள்... ஆதாரங்களை அழித்த நாகர்கோயில் காசியின் தந்தை... ஜாமீன் மறுப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/a313c46051b46f4c622110f91132fa9c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் உள்ள சாட்சியங்களை அழித்த வழக்கில் தந்தை தங்கபாண்டியன் ஜாமின் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் சேர்ந்த சுஜி என்ற காசி என்பவன் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும் காசி மீது வழக்கு பதியப்பட்டது.
இவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் க்ரைம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். லேப்டாப்பை யார் அழித்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், காசியின் தந்தையான தங்கபாண்டியன் இந்த செயலை செய்திருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் இவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீசார் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அறிக்கை தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் அறிக்கையில்,
* காசியின் வீட்டில் இருந்து ஆப்பிள் மொபைல் போனும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.
* பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் தடையவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது முதல் குற்றவாளியான காசி 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் மடிக்கணினி மற்றும் செல்போனில் இருந்ததாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது. என கூறிப்பிட்டுள்ளனர்.
எனவே, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)