மேலும் அறிய
Advertisement
சிறுமியை வன்கொடுமை செய்த தாத்தா மற்றும் 3 மகன்கள் - முன் ஜாமீன் கோரிய வழக்கில் எஸ்பி பதில் தர உத்தரவு
இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை மேலும் இந்த வழக்கில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை - மதுரை உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த அர்ஜுனபாண்டி மற்றும் அவரது மகன்கள் கிருஷ்ணபாண்டி, பாலகிருஷ்ணன், சூரியநாராயணன் ஆகியோர் மீது 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் இதோடு சேர்த்து 5 முறை முன்ஜாமீன் கோரி வழக்கு தாக்கல் செய்து உள்ளார் இதில் 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது 2 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. மனுதாரர்கள் உறவினரின் 16 வயது குழந்தையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர். திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை மேலும் இந்த வழக்கில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து சிடி-யை (CD) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து வழக்கின் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion