மேலும் அறிய

Crime: நீண்டநேரம் போனில் பேசியதால் ஆத்திரம்.. மனைவியை கொன்ற நபர் தற்கொலை..

மனைவியை கொலை செய்துவிட்டு, 50 வயது மதிக்கத்தக்க நபர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்னை வருவது வழக்கம். அந்த பிரச்னைகள் சில நேரத்தில் முற்றி கொலை வரும் செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது. அந்தவகையில் தற்போது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை கொலை செய்து கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் குல்வந்த் சிங் (50). இவருக்கும் புஷ்பா சிங்(38) என்பவருக்கும் இடையே திருமணம் நடந்து இரண்டு ஆண் குழந்தைகள் இருந்துள்ளன. குல்வந்த் சிங் கட்டடம் தொடர்பான தொழிலை செய்து வருகிறார். கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கணவர்-மனைவி இடையே சண்டை அதிகமாகியுள்ளதாக தெரிகிறது. அந்தச் சண்டை முற்றிய போது புஷ்பா சிங்கை அவருடைய கணவர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் குல்வந்த் சிங் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய இவர்களது மகன் தாய் மற்றும் தந்தை சடலமாக இருப்பதை பார்த்துள்ளார். அதன்பின்னர் அந்தச் சிறுவன் தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு இருந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு இருந்த குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மனைவி புஷ்பா சிங் நீண்ட நேரம் தன்னுடைய நண்பருடன் தொலைபேசியில் பேசுவது கணவர் குல்வந்த் சிங்கிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  நண்பருடன் நீண்ட நேரம் மனைவி தொலைபேசியில் பேசியதால் அவரை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்கொலைக்கான காரணங்கள் : 

தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 

மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)

அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget