மேலும் அறிய

Local Body Election | தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் 94 ரவுடிகள் கைது

Urban Local Body Election: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளில் 102 நகரமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் 108 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 210 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு அந்த வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதியின்  காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vijayakanth: டாஸ்மாக் பார்களை மூட நீதிமன்றம் உத்தரவு: விஜயகாந்த் வரவேற்பு

தேர்தல் சமயத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தில் யாரேனும் செயல்படுவதை தடுக்கும் வகையிலும் தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற முதல் நடவடிக்கையாக ரவுடிகள், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும்படி போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.


Local Body Election | தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் 94 ரவுடிகள் கைது

Dr Ravindranath Speech: ஆளுநர் தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்துகிறார் - டாக்டர் ரவீந்திரன் ஆவேசம்

இதையடுத்து விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய காவல் உட்கோட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 94 ரவுடிகளை போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

இவர்களில் பலர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தாங்கள் எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் எனவும், அப்படி மீறி பிரச்சினைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பத்திரங்களை போலீசாரிடம் எழுதி கொடுத்து வருகின்றனர். ரவுடிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget