Crime: பொது இடத்தில் உடலுறவு வைத்து கொண்ட தம்பதி... வீடியோ வைரலானதால் கைது செய்த காவல்துறை
பொது இடத்தில் உடலுறவு வைத்து கொண்ட தம்பதியின் வீடியோ ஒன்று வேகமாக வைரலானது.
சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை ஆதாரமாக வைத்து ஒரு சில நேரங்களில் வழக்குப்பதிவு செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் மூலம் காதலர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டன் நாட்டின் லிவர்பூல் பகுதியில் கடந்த 4ஆம் தேதி ஒரு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வந்துள்ளது. அதன்படி தம்பதிகள் ஒரு பொது இடத்தில் உடலுறவு வைத்து கொள்ளும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோவில் இருந்த தம்பதிகள் இருவரையும் தற்போது காவல்துறையினர் பிடித்துள்ளனர். முதலில் அந்த வீடியோவில் இருந்த பெண் கெலி கசின்ஸ்(35) என்பவரை கடந்த 6ஆம் தேதி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அளித்த தகவலின் படி அந்த வீடியோவில் இருந்த ஜோ ஃபிர்பி(23) என்ற நபரை தேடி வந்துள்ளனர். இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி ஜோ ஃபிர்பியை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மீண்டும் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக லிவர்பூல் நகர் மேயர் ஜோயன் ஆண்டர்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.
2/2 Let me be clear – this is a criminal offence. Acts of indecent behaviour in public places in Liverpool is simply unacceptable and will not be tolerated.
— Joanne Anderson (@MayorLpool) August 4, 2022
I have spoken with @MerseyPolice and requested immediate and appropriate action.
அதில் அவர், “தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்” எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த அறிவுறுத்தலுக்கு பிறகு காவல்துறையினர் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்