மேலும் அறிய

ஒசூர் : ’அக்காவை கொல்ல காரணமாக இருந்ததால் கொன்றேன்..’ கொலை வழக்கில், வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ஓசூரில் தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், எனது அக்காவை கொல்ல காரணமாக இருந்ததால் கொன்றேன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்தவர் யாரப் வயது (45) இவர் மெத்தை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சல்மா யாரப்புக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த குடிப்பழக்கத்தால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் யாரப் மனைவியை பிரிந்து கடந்த சில மாதங்களாக ஓசூர் சானசந்திரம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் யாரப், அங்குள்ள கடவுள் நகர் பகுதியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மாநாகராட்சி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.


ஒசூர் : ’அக்காவை கொல்ல காரணமாக இருந்ததால் கொன்றேன்..’ கொலை வழக்கில், வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

 

யாரப்புடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் வயது (20) உடன் மது அருந்தியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் யாரப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் சந்தோஷை பிடித்து காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், யாரப்பை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் காவல்துறையினரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனது அக்கா அஸ்வினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவாஸ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவாஸ்கான் எனது அக்காவை அடித்துக்கொலை செய்தார்.

ஒசூர் : ’அக்காவை கொல்ல காரணமாக இருந்ததால் கொன்றேன்..’ கொலை வழக்கில், வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

 

தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்தநிலையில் கடந்த 1-ஆம் தேதி மாலை நானும், யாரப்பும் கடவுள் நகரில் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது மதுபோதையில் யாரப், உனது அக்கா அஸ்வினியை கொலை செய்ய நான்தான் அவாஸ்கானுக்கு திட்டம் தீட்டி கொடுத்தேன் என்று கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நான் அங்கு கிடந்த கம்பியால் யாரப்பை தாக்கினேன். மேலும் கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டு கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினேன். ஆனால் காவல்துறையினர் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு சந்தோஷ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஓசூரில் தொழிலாளி, கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Petrol, Diesel Price : பயமுறுத்தும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தலைப்பு செய்திகள்

ஏ.பிளஸ் ரவுடி கொடூரக் கொலை! முகத்தை சிதைத்துவிட்டு தப்பியோடிய கும்பல் - நடந்தது என்ன?
ஏ.பிளஸ் ரவுடி கொடூரக் கொலை! முகத்தை சிதைத்துவிட்டு தப்பியோடிய கும்பல் - நடந்தது என்ன?
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Embed widget