மேலும் அறிய

Krishnagiri Caste killing: காதல் திருமணத்தால் ஆணவக்கொலை.. கிருஷ்ணகிரியில் மகன், தாயை வெட்டிக்கொன்ற கொடூரம்

காதல் திருமணம் காரணமாக கிருஷ்ணகிரியில் மகன் மற்றும் தாயை கத்தியால் தாக்கி, ஆணவக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊத்தங்கரை அருகே  அருணபதி கிராமத்தில் காதல் திருமணம் செய்த மகனை தந்தையே வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன்படி தண்டபாணி என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் சுபாஷ் மற்றும் தனது தாய் கண்ணம்மாள் ஆகியோரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மருமகள்  அனுசுயாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அருணபதி கிராமத்தை சேர்ந்த  சுபாஷ் கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி, மாற்று சமூகத்தை சேர்ந்த அனுசுயாவை காதல் திருமணம் செய்தார். திருப்பூரில் வேலை செய்த இடத்தில்  ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயாவிற்கும், சுபாஷிற்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டின் எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்த தண்டபாணி தனது தாய், மகன் மற்றும் மருமகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதான தண்டபாணி. இவர் தனது மகன் சுப்பாஷ் உள்ளிட்ட குடும்பத்தாருடன் சேர்ந்து, திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் சுபாஷிற்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்கு தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுபாஷ் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலை மணம் முடித்துள்ளார்.

திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவக்கொலை:

 இந்நிலையில் தனது சொந்த கிராமமான அருணபதி வந்த தண்டபாணி,  தனது தாய் கண்ணம்மாள் மூலம் சமாதானம் பேசி  சுபாஷையும் அவரது மனைவியும் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.  அங்கு அனைவரும் சகஜமாக பேசி உண்டுவிட்டு உறங்கியபோது, அதிகாலை 5 மணி அளவில் தண்டபாணி கூர்மையான கத்தியால் மகன் சுபாஷை வெட்டி உள்ளார். சத்தம் கேட்டு எழுந்து தடுக்க முயன்ற தாய் கண்ணம்மாளையும் தண்டபாணி வெட்டியதோடு, மருமகள் அனுசுயாவையும்  வெட்டியிருக்கிறார்.  தட்டி தடுமாறி அவர் வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலையில், வீட்டை பின்புறமாக பூட்டி விட்டு தண்டபாணி தலைமறைவாகியுள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை:

இதனிடையே, படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்த அனுசுயாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்தபோது சுபாஷ் மற்றும் கண்ணம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.  இதையடுத்து, இருவர் சடலமும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படது..  ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனுசுயாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தலைமறைவாக உள்ள தண்டபாணியை ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்மின் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றன.

அண்மையில் நடந்த சம்பவம்:

கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், சரண்யா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இதையடுத்து. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜெகனுக்கு போன் செய்த சரண்யாவின் சகோதரர் நீங்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருப்பதாகவும் அதனை வந்து பெற்றுச் செல்லுமாறும் அழைத்தார்.

அதனை நம்பிச் சென்ற ஜெகனை சரண்யாவின் உறவினர்கள் பட்டப்பகலில் சாலையில் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்லமாக வளர்த்த மகளை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததால் ஜெகனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு ஆணவக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget