மேலும் அறிய
Kodanad Case: கோடநாடு வழக்கு : ஜாமீனில் உள்ள 8 பேரை விசாரணைக்கு அழைக்க போலீஸ் முடிவு
கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய ஜாமீனில் உள்ள 8 பேரையும் மீண்டும் அழைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோடநாடு பங்களா
கோடநாடு பங்களா கொலை வழக்கின் விசாரணை நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ள 8 நபர்களையும் மீண்டும் அழைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொலைபேசி மூலம் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி ஆகியோரை தொலைபேசி மூலம் அழைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது அவர்கள் 8 பேரும் கேரளாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















