மேலும் அறிய
Advertisement
குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே கடத்தப்பட்ட மதபோதகர் கேரளாவில் மீட்பு
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் கேரளா காவல்துறையிடம் ஒப்படைக்க கடத்தபட்டதாக கடத்தியவர் வாக்குமூலம், கார் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே ஆஃப் காட் கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதகராக இருப்பவர் ஜோண் குட்டி(வயது 62). தேவாலயத்தின் அருகில் உள்ள வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மாலையில் மார்த்தாண்டத்தை சேர்ந்த சிலர் இவரை பிரார்த்தனைக்கு அழைத்துள்ளனர். வீட்டிலுள்ளோரிடம் கூறிவிட்டு அவர் ஆட்டோவில் மார்த்தாண்டத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது மகன் ஷெரின் ஜோண் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் ஜோண்குட்டியை தேடிவந்தநிலையில் ஆற்றூர் இதையடுத்து உறவினர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோதும் சுவிட்டு ஆஃப் என பதில் வந்தது. இந்த நிலையில் பல இடங்களில் தேடியும் ஜோண் குட்டியைக் காணாததால் மார்த்தாண்டம் வரையிலான சாலையோர கடைகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் வைத்து மர்ம நபர்கள் ஜோண் குட்டியை கடத்திச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால் எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியாமல் காவல்துறையினர் குழம்பிய நிலையில் அவரது குடும்பத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜோண் குட்டியிடம் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சிலர் பேசியதை உறுதிசெய்த காவல்துறையினர் . இது குறித்து கேரளா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கேரளா காவல்துறை உதவியுடன் கோட்டயத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஜோண் குட்டியை மீட்டனர்.
அவரை ஒரு கும்பல் கடத்தி சிறை வைத்தது தெரிந்தது. இதையடுத்து திருவட்டார் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் ராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் கோட்டயத்துக்குச்சென்று போதகரை மீட்டு அழைத்து வந்தனர்.
இதைதொடர்ந்து மதபோதகரை கடத்தியதாக கேரளா மாநிலம் கோட்டயம் மன்னார்காட்டு பகுதியை சேர்ந்த சுனில் (46)என்பவரை கைது செய்த திருவட்டார் காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர் அதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜோன்குட்டியின் சொந்த ஊர் கோட்டயம் எனவும் அவரது பெயரை கூறி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் சுனிலிடம் 7லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து மதபோதகர் ஜோன்குட்டியை அழைத்துவந்து கேரளா காவல்நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்த சுனில் மதபோதகரை கடத்தியதாகவும் ஒப்புக்கொண்டார். எனினும் வேறு காரணங்கள் எதாவது உள்ளதா என்பது குறிண்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தபட்ட மதபோதகரை கேரளா காவல்துறையினரின் உதவியுடன் குமரி காவல்துறையினர் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion