மேலும் அறிய

Civic Chandran : பிரபல எழுத்தாளர் மீது மேலும் ஒரு பாலியல் குற்றப் புகார்.. பரபரப்பு பதிவுகள்.. நடந்தது என்ன?

கேரள எழுத்தாளர் சிவிக் சந்திரன் மீது இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது இன்னொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார்.

கேரள எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாக அறியப்பட்ட சிவிக் சந்திரன் மீது இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது இன்னொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன். இவர் மீது கடந்த வாரம் இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் கோயிலாண்டி காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சிவிக் சந்திரன் தலைமறைவாக உள்ளார். அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார். 

இந்நிலையில் தான் மேலும் ஒரு இளம் பெண் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.  நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் கடந்த 2020 பிப்ரவரியில் சந்திரன் தன்னை ஒரு புத்தகக் காட்சியில் சந்தித்ததாகவும், அப்போது பாலியல் இச்சையுடன் தன்னை நெருங்கியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இத்துடன் இரண்டு புகார்கள் எழுந்துள்ள நிலையில் சிவிக் சந்திரன் தலைமறைவாக உள்ளார்.

யார் இந்த சிவிக் சந்திரன்?

சிவிக் சந்திரன் 71 வயது எழுத்தாளர். கேரள மாநிலம் நன்கு அறிந்த இலக்கிய, கலாச்சார அடையாளம். இவர் முன்னாள் நக்சல்பாரியும் கூட. கோழிக்கோட்டில் இவர் நன்கு அறியப்பட்ட பிரபலம். இந்நிலையில் தான் அவர் மீது பெண் எழுத்தாளர் புகார் கூறினார். அவர் கடந்த 22ஆம் தேதி தனது பேஸ்புக் பதிவில் தனக்கு நேர்ந்த அவலம் பற்றி விவரித்திருந்தார்.

பாலியல் தொல்லையை விவரித்த ஃபேஸ்புக் பதிவு:

அதில்  அவர், ஒரு புத்தக கண்காட்சியை ஒட்டிய நிகழ்ச்சி அது. அங்கிருந்தவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள். அதனாலேயே கவிதை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் நாங்கள் அனைவரும் மது அருந்தோன். பின்னர் நாங்கள் அருகிலிருந்த கடற்கரைக்கு சென்றோம். அதுவரை இயல்பாக இருந்த சிவிக் சந்திரன். கடற்கரையில் என் கரங்களைப் பற்றி இழுத்து என்னை அவர் உடலோடு கட்டியணைத்தார். நான் அவரைத் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டேன். ஆனாலும் கடற்கரையில் இருந்த வரை அவர் என்னை சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு செய்தார். பின்னர் எனது அருகே வந்து என் மடியில் தலைவைத்துப் படுக்க முற்பட்டார். என் உடல் மீது அவர் கைகளை கொண்டு தடவ முற்பட்டார். எல்லோரும் இந்தக் காட்சியைப் பார்த்தனர். நான் அவரை தள்ளிவிட்டு வேறொரு இடத்துக்குச் சென்றேன். ஒரு கவிஞர் எனது நிலை அறிந்து என்னை தேற்றினார். நான் மிகவும் வருந்தினேன். அங்கே நிறைய பேர் இருந்தனர். அதனால் அந்த வேளையில் ஒரு பெரிய பிரச்னை உருவாக்க வேண்டாம் என்று எண்ணினேன்.

நாங்கள் கடற்கரையில் இருந்து உணவு அருந்தும் இடத்திற்கு வந்தோம். அங்கும் தொடர்ந்து வந்த அவர் எனக்கு உணவு ஊட்டிவிட முற்பட்டார். நான் சாப்பிடாமலேயே அங்கிருந்து புறப்பட்டேன். ஒரு கலாச்சார ஆர்வலர், கவிஞரிடமிருந்து இப்படியொரு அருவருப்பான அனுபவம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை அன்றே அங்கேயே ஏன் அறையாமல் விட்டோம் என்று இப்போது வருந்துகிறேன். அவருடைய வயதில் பாதி வயது நிரம்பிய ஒரு பெண்ணிடம் அவரால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது எனத் தெரியவில்லை. அவரை ஆதரித்துப் பேசுபவர்களை நினைத்து எனக்கு இன்னமும் கோபம் அதிகமாக வருகிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவிக் சந்திரன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget