Crime: திருமணம் செய்ய மறுத்த சிறுமி... நடுரோட்டில் கத்தியால் குத்திய இளைஞர்.. கேரளாவில் பயங்கரம்!
கேரளாவில் காதலிக்க மறுத்த சிறுமியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Crime: கேரளாவில் காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை, இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தொடரும் கொடூரங்கள்:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நின்றுபோன திருமணம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் (28). இவர் அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை நீண்ட நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளர். பின்னர், இளைஞர் அர்ஷத், சிறுமியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்தினரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால், இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதையும் மீறி, கடந்த சில மாதங்களுக்கு முன், இருவருக்கும் அவரது வீட்டார்கள் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களிலேயே திருமணம் வரை போகாமல் நின்றது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அர்ஷாத் சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார். இதனால், சிறுமியின் குடும்பத்தினர் வேறு இடத்தில் குடிபெயர்ந்தனர்.
அப்போதும், சிறுமியை விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று சிறுமியை பலமுறை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சிறுமியை தாக்கிய இளைஞர்:
Viral CCTV footage of Arshad stabbing and injuring a minor girl in Kozhikode, Kerela for allegedly refusing engagement.
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 28, 2023
Victim, a 17-year-old student in a nursery teacher course, was attacked on her way home after her class.pic.twitter.com/rHbDjvXBg7
இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி கோழிக்கோடு நாதாபுரத்தில் சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கலாச்சி சந்தையில் மதியம் 2 மணியளவில் சிறுமியை பின்தொடர்ந்த இளைஞர் அர்ஷத், அவரிடம் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சிறுமியை அடித்ததோடு, அவர் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் இளைஞர் அர்ஷத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.