Crime: கேரள தம்பதி உள்பட 3 பேர் ஹோட்டல் அறையில் மர்ம மரணம் - அருணாச்சல பிரதேசத்தில் நடந்தது என்ன?
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தம்பதி மற்றும் இவர்களின் நண்பர் ஆகிய 3 பேர் அருணாச்சல் விடுதியில் மர்ம முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூவர் உயிரிழப்பு:
கடந்த செவ்வாய்க்கிழமை திருமணமான தம்பதிகள் மற்றும் அவர்களின் நண்பர் ஒருவர் என கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் அருணாச்சல பிரதேசத்தின் ஜீரோ நகரில் உள்ள ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் நீண்ட நேரம் இல்லாததைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் அவர்களது ஹோட்டல் அறையை சோதித்ததனர். அப்போது, அவர்கள் சடலமாக உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இறந்தவர்களின் மூவரது மணிக்கட்டில் வெட்டுக் காயங்களால் ரத்தம் கசிந்து இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அவர்களது ஹோட்டல் அறையில் இருந்து ஒரு குறிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவைச் சேர்ந்தவர்கள்:
இறந்தவர்கள் நவீன் தாமஸ், அவரது மனைவி தேவி என்றும், அவர்கள் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள் என அடையாளம் தெரியவந்தது. மூன்றாவது நபர் திருவனந்தபுரத்தில் வசிக்கும் பள்ளி ஆசிரியரான ஆர்யா பி நாயர் (29) என்பது தெரியவந்தது.
மார்ச் 28 ஆம் தேதி மூவரும் ஹோட்டலுக்குச் சென்றதாகத் தெரிகிறது. இருப்பினும், ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அவர்களை காணவில்லை என ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். இது பெரும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், ஓட்டல் ஊழியர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் உயிரற்ற நிலையில் இருந்தனர்.
காவல்துறை தீவிர விசாரணை:
ஆர்யா பி நாயர் மேஜையில் இறந்து கிடந்தார் என்றும் அவரது மணிக்கட்டில் காயங்களுடனும், தேவிக்கு கழுத்து மற்றும் மணிக்கட்டில் பலத்த காயங்களுடனும் தரையில் காணப்பட்டார் என்றும், இதற்கிடையில், நவீன் தாமஸ் குளியலறையில் இறந்து கிடந்தார் என்றும் அவரது மணிக்கட்டில் வெட்டு வெட்டப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இச்சம்பவம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட போலீஸ் குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதையடுத்து, அறையில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். ஆர்யாவை காணவில்லை என திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் ஆர்யாவின் உறவினர்கள் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மர்ம முறையில் கேரளாவைச் சேர்ந்த மூவரின் மரணமானது, அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: Crime: கேரளாவில் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் பெண்ணை கொலை செய்த இளைஞர்.. என்ன நடந்தது?