Crime: மீண்டும் கேரளாவில்! அமெரிக்க பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...சுற்றுலாவுக்கு வந்தபோது நேர்ந்த கொடூரம்...!
கேரளாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண், இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: கேரளாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண், இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலவா பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தைதேய உலுக்கியது. இந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளதாக நிலையில், மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுற்றுலா வந்த அமெரிக்க பெண்:
கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி 44 வயது பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். இங்கு வந்த அவர், கருனகப்பள்ளி அருகே உள்ள மாதா அமிர்தனாந்தமயி ஆசிரமத்திற்கு வந்துள்ளார். அப்போது, கடந்த ஜூலை 31ஆம் தேதி ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர், அவருக்கு சிகரெட் மற்றும் ரம் வகை மதுவை கொடுத்துள்ளனர். அதில் மதுவை குடித்த அந்த பெண், சிறிது நேரத்திலேயே சுயநினைவே இழந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை:
பின்னர், அந்த பெண்ணை, அவர்களின் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அருகில் இருந்த ஆள் இல்லாத வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை இரண்டு பேர் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்த அவர்கள் தப்பியோடி உள்ளனர். இதனை அடுத்து, அந்த பெண் காலையில் எழுந்தவுடன் ஆசிரமத்திற்கு சென்று இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர், ஆசிரம நிர்வாகிகள் கொல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை கைது செய்தனர். அவர்கள் ஜெயன், நிகில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி:
பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண்ணை ஆசிரம நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு சுற்றுலா வந்த 44 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று கேரளாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க
Mexico Bus Crash: மெக்ஸிகோவில் பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..
Rahul Gandhi Case: மன்னிப்புக்கு ”நோ” சொன்ன ராகுல் காந்தி.. உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை