கரூரில் பணியின்போது ஒப்பந்த தொழிலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தாந்தோன்றி மலையைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் ரமேஷ் கண்ணன் பணியின் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. அரசு கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
தாந்தோன்றி மலையைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் ரமேஷ் கண்ணன் பணியின் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் தாந்தோன்றி மலை அசோக் நகர் மூன்றாவது கிராசில் வசித்து வருபவர் ரமேஷ் கண்ணன் வயது 35. இவர் கடந்த 10 ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரில் பணியாற்றியபோது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காந்திகிராம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ரமேஷ் கண்ணனுக்கு கௌதமி என்ற மனைவியும், பார்க்கவி என்ற மகளும், திருமுருகன் என்ற மகனும் உள்ளனர். காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி விழுந்த ரமேஷ் கண்ணனின் தாயார் கதறி அழும் காட்சி கூடி இருந்தவரை கண்ணீரை வர வைத்தது.
ரமேஷ் கண்ணன் உடல் வைக்கப்பட்டுள்ள காந்திகிராம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பசுபதி பாளையம் போலீசார் மற்றும் தாந்தோன்றி மலை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்