Crime: கரூர் அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
கரூர் அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கரூர் அருகே புலியூர் கணேசா புரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் புலியூரில் சொந்தமாக வாட்ச் கடை நடத்தி வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், மூக்குத்தி, வளையம், ஆரம் உள்பட ஆறு பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்