மேலும் அறிய

Crime: பாரில் மாமுல்  கேட்டு தகராறு; கேசியரை வெட்டிய இருவர் - தடுக்க வந்த எஸ்.ஐ.,க்கும் விழுந்த வெட்டு

டாஸ்மாக் பார் கேசியருக்கு அரிவாள் வெட்டு. தடுக்க சென்ற எஸ்ஐ விரல் மீது அரிவாள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் குளித்தலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் மாமுல் கேட்டு தகராறு செய்த இரண்டு வாலிபர்கள், பார் கேசியரை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க சென்ற குளித்தலை சப்-இன்ஸ்பெக்டருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Crime: பாரில் மாமுல்  கேட்டு தகராறு; கேசியரை வெட்டிய இருவர் - தடுக்க வந்த எஸ்.ஐ.,க்கும் விழுந்த வெட்டு

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர்  (வயது 30). இவர் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா, திருச்சி - கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் கேசியராக வேலை பார்த்து வந்துள்ளார்.  இதில் குளித்தலை தெற்கு மணத்தட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன்கள் பிரதீப், சேது ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை 7 மணி அளவில் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்த ஸ்ரீதரை தெற்கு மனம் தட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன்கள் பிரதீப் சேது ஆகிய இருவரும் மாமுல் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

Crime: பாரில் மாமுல்  கேட்டு தகராறு; கேசியரை வெட்டிய இருவர் - தடுக்க வந்த எஸ்.ஐ.,க்கும் விழுந்த வெட்டு

இதில், கேசியர் ஸ்ரீதர் பணம் தர மறுத்ததால் பிரதீப், சேது ஆகிய  இருவரும் ஸ்ரீதரின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டி உள்ளனர். உயிருக்கு பயந்து கடையை விட்டு சாலையில் ஓடி வந்த ஸ்ரீதரை அவர்கள் இருவரும் விரட்டிக்கொண்டு சென்று உள்ளனர்.  அப்பொழுது  சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஓடி சென்று அந்த வாலிபர்களை மடக்கி உள்ளார். அப்பொழுது வாலிபர்கள் ஸ்ரீதரை சாலையில் ஓட ஓட வெட்ட முயற்சி செய்த பொழுது தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதில் அவரின் வலது கையில் மூன்று விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Crime: பாரில் மாமுல்  கேட்டு தகராறு; கேசியரை வெட்டிய இருவர் - தடுக்க வந்த எஸ்.ஐ.,க்கும் விழுந்த வெட்டு

உயிரை பணயம் வைத்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வாலிபர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக குளித்தலை காவல் நிலையம் அழைத்து சென்றார். உயிருக்கு போராடிய பார் கேசியர் ஸ்ரீதர் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குளித்தலை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுங்க கேட் பஸ் ஸ்டாப்பில் கணவனே, மனைவியை வெட்டியது பிரச்சனை அடங்குவதற்குள் மீண்டும் இரண்டு நாட்களுக்குள் சுங்க கேட்டில்  சாலையில் ஓட ஓட வாலிபரை வெட்டியது குளித்தலை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது குளித்தலை பகுதியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Leopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்Vikravandi By Election | அன்புமணி வசமான பாமக! விக்கிரவாண்டியில் போட்டி! தைலாபுரம் EXCLUSIVE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
NEET UG 2024 Result: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
NEET UG 2024 Result: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
Embed widget