மேலும் அறிய

கரூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருந்த 2 பேர் கைது

மான் கொம்பு, நாட்டு துப்பாக்கி, அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்

கரூரில் முன்விரோதம் காரணமாக வாள், கத்தி, அரிவாள், நாட்டுத் துப்பாக்கியுடன் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான நபர்களிடமிருந்து மான் கொம்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை பார்த்தவுடம் திரும்பி வேகமாக செல்ல முற்பட்டார். அவரை பிடித்து விசாரித்தபோது, இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியில் வெள்ளை சாக்கில் அரிவாள் இருந்ததைப் பார்த்த போலீசார், அவரை  கைது செய்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் யுவராஜ் என்பதும், தாந்தோன்றிமலை, கருப்பகவுண்டன் புதூர் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. மேலும், அவருடை வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் வாள், சூரி கத்தி, அரிவாள், நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 

கரூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருந்த 2 பேர் கைது

மேலும், இடப் பிரச்சினை காரணமாக சித்ராதேவி என்பவருக்கு ஆதரவாக இருக்கும் யுவராஜ் கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த வெள்ளாளபட்டி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், தமிழ்நாடு அம்பேத்கர் மக்கள் இயக்கப் பொறுப்பாளராக இருந்து வருபவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவரை கொலை செய்ய வேண்டும் எனும் நோக்கில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  மேலும், இதேபோல் ரவிச்சந்திரனும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். கரூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருந்த 2 பேர் கைது

அதன் அடிப்படையில் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் ரவிச்சந்திரன் வீட்டை சோதனை செய்தனர். அங்கு மான் கொம்பு, நாட்டு துப்பாக்கி, அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரவிச்சந்திரனையும், யுவராஜையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
Embed widget