கர்நாடகாவில் வசித்து வரும் அருண் என்பவர் சக்கமா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில், காதலியின் வீட்டில் தங்களது காதலுக்கு திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை.
இதனால் அருண், தன் நண்பன் கோபாலை அழைத்து ஒரு ரகசியமாக ஒன்றை திட்டமிட்டுள்ளார். அதன்படி, போலீஸ் அதிகாரியாக நடித்த கோபால், சக்கமாவின் மைத்துனரான பிரஜ்வால் என்பவரை அழைத்து உங்கள் வீட்டில் அருணின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், தற்போது உயிர்க்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உங்கள் குடும்பத்தில் இருந்து அருண் மற்றும் சக்காமாவின் திருமணத்தை ஏற்பாடு செய்யவில்லை எனில், குடும்பத்தினர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் பயந்துபோன பிரஜ்வால் இதுகுறித்த செய்தியை சக்கம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிச்சியடைந்த சக்கமா, தனது காதலன் இல்லாத உலகத்தில் நானும் வாழமாட்டேன் என்று தெரிவித்தும், எனது மரணத்திற்கு எங்களை எங்கள் குடும்பம் சேர்க்காததே காரணம் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
சக்கம்மாவின் மரணத்திற்கு அருண் மற்றும் கோபால் செய்த ஆள்மாறாட்டம் செய்தது காரணம் என்று தெரிவித்து அந்த பெண்ணின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மீரா மிதுன் ஜாமீனை ரத்து செய்ய மனு: தாக்கல் செய்ய கூறிய நீதிபதி.. காரணம் என்ன?
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
சமந்தாவுக்கு இழைக்கப்பட்டதா அநீதி...? இயக்குனர்களை நோக்கி பாயும் இடைவெளி கேள்விகள்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்